காலம் காலமாக மூலிகைகளும், மூலிகை டீ வகைகளும் பல உடல் நல பிரச்சனைக்கு தீர்வாக இருந்து வருகின்றன. இந்த அத்தியாவசிய டீ வகைகளில் லெமன் கிராஸ் டீயும் ஒன்றாகும். இது உயரமான தண்டுகளுடைய வெப்பமண்டல தாவரமாகும். இதன் நறுமணம் காரணமாக லெமன் கிராஸ் அத்யாவசிய எண்ணெய் அரோமாதெரபியில் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றை புத்துணர்ச்சி அடைய செய்து மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இது ஆன்டி ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு, மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளின் நல்ல ஆதாரம் ஆகும். லெமன்கிராஸில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. லெமன்கிராஸ் டீ இன் செய்முறை மற்றும் அதன் நன்மைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது நல்லதா?
லெமன்கிராஸ் டீ செய்வது எப்படி?
1. முதலில் இரண்டு லெமன் கிராஸை எடுத்து, அதன் இலை மற்றும் தண்டு பகுதியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள லெமன் கிராஸை சேர்க்கவும்.
3. தீயை குறைத்து வைத்து 4-5 நிமிடங்கள் கலந்து விடவும்.
4. இந்த தண்ணீரை வடிகட்டி, சூடு லேசாக தணிந்த பின் வெல்லம் அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.
லெமன்கிராஸ் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
1. எடை இழப்புக்கு உதவும்
லெமன் கிராஸ் டீ இல் குறைவான கலோரி மட்டுமே உள்ளது. ஆகையால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் லெமன் கிராஸ் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இந்த டீ உங்களை நிறைவாக வைத்திருப்பதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. மேலும் இதில் உள்ள பாலிஃபீனால்கள் கலோரிகள் மற்றும் கெட்ட கொழுப்பை கரைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
2. சிறந்த செரிமானம்
லெமன் கிராஸ் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தும். இது வயிற்றை அமைதிப்படுத்தி செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. இதில் உள்ள சிட்ரல் எனும் மூலப்பொருள் செரிமானத்திற்கு உதவுகிறது. எனவே இரவு உணவிற்குப் பிறகு லெமன் கிராஸ் டீயை குடிக்கலாம்.
3.கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியம்
லெமன் கிராஸில் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின் A மற்றும் C நிறைந்துள்ளன. இவை உங்கள் கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்துகின்றன. இதனுடன் உங்கள் சருமத்தை சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. லெமன் கிராஸ் டீ உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முகப்பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளை தடுக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: ஆப்பிள் மற்றும் தேனை கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி?
4. நச்சுக்களை வெளியேற்றும்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த லெமன் கிராஸ் டீ உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மூலிகை டீ ஆக செயல்படுகிறது. இது உடலில் இருந்து நச்சுக்களை அகற்றவும், உட்புற சுத்திகரிப்பிற்கும் உதவுகிறது.
5. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
லெமன் கிராஸில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் அதிகரித்த இரத்த ஓட்டம் கல்லீரலின் சுத்திகரிப்புக்கும் உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik