21 Reasons for Hairfall: முடி உதிர்வதற்கான 21 காரணங்கள்

உங்கள் முடி உதிர்வதற்கான காரணத்தை கண்டறிய வேண்டுமா? விவரங்களை பதிவில் பார்க்கலாம்.

reasons for hairfall

ஒருமுறை முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், முடி உதிர்வதை கட்டுப்படுத்துவது கடினம். பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. இதற்கு உணவுமுறை, மரபு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். வயதானவர்களுக்கு மட்டுமே முடி உதிர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் இது உண்மையல்ல. முடி உதிர்தல் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் நிகழலாம், அது டீன் ஏஜ் பருவத்திலிருந்தே தொடங்கலாம். 1 லட்சம் தனிப்பட்ட முடிகள் இருக்கும் ஒருவரின் தலையிலிருந்து, சுமார் 100 முடிகள் தினமும் விழுந்து வளரும். ஆனால் இந்த எண்ணிக்கை 500-1000 ஐ எட்டினால், அது கடுமையான முடி உதிர்தல் ஆகும்.

உங்கள் தலைமுடி அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது உங்கள் ஆரோக்கியத்தின் வெளிப்பாடாகும். இது தொடர்பான சில தகவல்களை, மிஸ் இந்தியா போட்டியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் உணவியல் நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் முடி கொட்டுவதற்கான காரணங்கள் பற்றியம் அவர் விவரித்துள்ளார். இதில் வேலை அழுத்தம், மன அழுத்தம், கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களும் அடங்கும்.

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன?

hair fall in women

உங்கள் முடி உதிர்வதற்கான 21 காரணங்கள்

  • மரபணுப் பிரச்சனை - உங்கள் உடலில் ஏதேனும் ஒரு மரபணுப் பிரச்சனை இருந்தால் முடி கொட்டலாம்.
  • குழந்தை பிறப்பு - குழந்தைகள் பிறந்தபிறகு, தாய்மார்களுக்கு முடி உதிர்வு ஏற்படலாம்.
  • வீக்கம் மற்றும் அழற்சி - உடல் நல குறைபாடுகளாலும் முடி உதிர்கிறது.
  • ஹார்மோன் சமநிலையின்மை - உங்கள் உடலில் ஹார்மோன் பிரச்சனை இருந்தால், முதலில் உங்கள் தலை முடி தான் பாதிக்கப்படும்.
  • தைராய்டு - ஹைப்பர் மற்றும் ஹைப்போ தைராய்டு பிரச்சனையினாலும் முடி உதிர்கிறது.
  • PCOD - உங்களுக்கு PCOD பிரச்சனை இருந்தால் உங்கள் தலைமுடி உதிரலாம்.

baldness hair

  • ஈஸ்ட்ரோஜன் ஏற்றத்தாழ்வு - உடலில் பல விஷயங்கள் ஏற்றதாழ்வுகளுடன் இருந்தாலும் முடி உதிர்கிறது.
  • இன்சுலின் எதிர்ப்பு - உங்கள் உடலில் சர்க்கரை நோயின் தாக்கம் இருந்தாலும் முடி கொட்டும்.
  • நாள்பட்ட சிதைவு நோய்- நீண்ட நாட்களாக நோய் இருந்தால் அது முடி உதிர்வை ஏற்படுத்தும்.
  • ஆட்டோ இம்யூன் நோய் - உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், முடி உதிர்வு ஏற்படும்.
  • மனச்சோர்வு- உங்களுக்கு மனச்சோர்வு பிரச்சனை இருந்தால், இதன் காரணமாகவும் உங்கள் தலைமுடி உதிரலாம்.
  • ஆண்ட்ரோஜன்கள் - உங்கள் உடலில் ஆண்ட்ரோஜன்கள் அதிகமாக இருந்தால், முடி அதிகமாக உதிரக்கூடும்.
  • செரிமான பிரச்சனைகள் - உங்கள் உடலில் செரிமானம் தொடர்பான பிரச்சனை இருந்தால், முடி உதிரும்.
  • குளுட்டன் மற்றும் லாக்டோஸ் பிரச்சனை - குளுட்டன் அல்லது லாக்டோஸ் ஜீரணிப்பதில் பிரச்சனை இருந்தால், நிறைய முடி உதிரலாம்.hair fall

  • வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு - உங்கள் உடலில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும், முடி உதிர்வு ஏற்படும்.
  • என்சைம் குறைபாடு - உங்கள் உடலில் ஏதேனும் என்சைம் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும்.
  • தவறான உணவுமுறை - சரியான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், முடி கொட்டும்.
  • அதிகப்படியான முடி சிகிச்சை- அதிகப்படியான முடி பராமரிப்பு சிகிச்சைகள் காரணமாகவும், உங்கள் முடி உதிரக்கூடும்.
  • அறுவைசிகிச்சை - எந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அதிக மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதும் முடி உதிர்வு ஏற்படும்.
  • மோசமான தூக்க பழக்கம்- உங்களுக்குத் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அல்லது ஏதேனும் காரணத்தினால் தூக்க சுழற்சி சீர்குலைந்தால் முடி கொட்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த சத்தான 10 உணவுகள், முடி வேகமாக வளர உதவும், ஒரு முறை முயன்று தான் பாருங்களேன்…

இந்த உடல்நலப் பிரச்சினைகள் உங்களுக்கும் ஏற்பட்டால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். இந்தப் பிரச்சனைகளுள்ள நிலையில் எந்த அழகு சிகிச்சையும் பயனளிக்காது. இந்த அடிப்படை பிரச்சனைகளை மருத்துவரின் வழிகாட்டுதலுடன் சரி செய்யுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மார்பக பாதுகாப்பு வழிமுறைகள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP