பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே ஆசைப்படுவர். ஆனால், அவர்களை சுற்றி இருக்கும் தூசியும், மாசும், புறஊதா கதிர்களும், தூய்மையற்ற நீரும் அவர்களின் ஆரோக்கியமான கூந்தல் கனவை கலைத்துவிடுகிறது.
எனினும், கூந்தல் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பெண்கள் பலவித ஷாம்புகளையும், எண்ணெய்களையும், கூந்தலுக்கான பிற தயாரிப்புக்களையும் பயன்படுத்துகின்றனர். இதை தவிர, பல பெண்கள் எண்ணெய் வைப்பது போன்ற பாரம்பரியமான விஷயங்களை செய்தும் கூந்தல் வளர்ச்சிக்கு முயற்சி செய்கின்றனர்.
ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில், எவை கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் என்பதை தான் பார்க்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவுகள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும். முக்கியமாக, நீங்கள் உயர் புரதச்சத்து உணவுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். பயோட்டின் போன்ற துணை பொருட்கள் அதிகரிப்புக்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
போலேட், சல்பர், துத்தநாகம், வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் B12 ஆகியவை முடி உதிர்வை குறைக்க உதவும். எனவே தான், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான 10 சூப்பர் உணவுகளை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
இதனை ஊட்டச்சத்து நிபுணர் மன்பிரீத் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கூந்தலின் வளர்ச்சிக்கு உதவும் 10 சிறந்த உணவுகள்
நெல்லிக்காய்
- ஆக்சிஜனேற்ற பண்பினை கொண்டது
- நரை முடிக்கும், பொடுகு பிரச்சனைக்கும் நல்லது
என்ன செய்யலாம்?
- முடி வளர்ச்சிக்கு, நெல்லிக்காய் மற்றும் கற்றாழை மாத்திரையை நீங்கள் காலையில் எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல், நெல்லிக்காய் மற்றும் கற்றாழை ஜூஸையும் குடித்து வரலாம்.
கறிவேப்பிலை
- இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்தது
- இது முடி உதிர்வை குறைக்கும், நரைமுடி வராமல் பாதுகாக்கும்
என்ன செய்யலாம்?
- 3 முதல் 4 கறிவேப்பிலை இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மென்று வர, முடிக்கு நல்லது
பாதாம் மற்றும் பிற பருப்புக்கள்
- ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E மற்றும் பயோட்டின் நிறைந்தது
- ஆக்சிஜனேற்ற பண்பினையும் அதிகம் கொண்டது
என்ன செய்யலாம்?
- தினமும் காலையில் 5 பாதாமையும், 1 வால்நட்டையும் சாப்பிட்டு வரவும். இதற்கு, இரவே தண்ணீரில் ஊறவைத்து விடவும்.
முருங்கை
- இதனில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஜினேற்ற பண்புகள் உள்ளது
- முடியின் நுண்குமிழ் சேதத்தை தடுக்க உதவுகிறது
என்ன செய்யலாம்?
- மதிய உணவிற்கு, பருப்பு வகை உணவு/காய்கறி உணவு போன்றவற்றில் முருங்கை பொடியை சேர்த்துக்கொள்ளவும். சில நாட்களிலேயே முடி வேகமாக வளர்வதை காண்பீர்கள்.
வேர்க்கடலை
- இதனில் வைட்டமின் E, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பயோட்டின் உள்ளது
- ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்
என்ன செய்யலாம்?
- இரவில் ஊறவைத்த வேர்க்கடலையை அவல், உப்புமா போன்றவற்றில் சேர்க்கவும்
எள் + சீரகம்
- இதனில் கால்சியம் மற்றும் மாங்கனீசு உள்ளது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது
- ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது
என்ன செய்யலாம்?
- சப்பாத்தியுடன் எள்ளு சேர்த்து சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு சீரக டீ குடிக்கலாம்
திரிபலா
- பாக்டீரியா எதிர்ப்பு பண்பினை கொண்டது
- முடி வளர்ச்சிக்கு உதவி, நரைமுடியையும் தடுக்கும்
என்ன செய்யலாம்?
- இரவு தூங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்பு டீ போட்டு குடிக்கலாம்
சாலியா விதைகள்
- கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, C, E போன்றவை உள்ளது
- ஆக்சிஜனேற்ற பண்பு நிறைந்தது
என்ன செய்யலாம்?
- காலைவேளையில் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, ¼ டீஸ்பூன் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.
வெந்தயம்
- பைட்டோ எஸ்ட்ரோஜன் நிறைந்தது
- முடி சேதமாகாமல் பாதுகாக்கும்
என்ன செய்யலாம்?
- ஒரு டம்ளர் தண்ணீருடன் ஊறவைத்து, அரைத்த வெந்தயத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.
வெள்ளரிக்காய்
- இதனில் சிலிக்கான் மற்றும் சல்பர் உள்ளதால் முடி வளர்ச்சிக்கு உதவும்
- நீர்ச்சத்து போக்கினையும், அழற்சியையும் குறைக்க கூடியது
என்ன செய்யலாம்?
- கொத்தமல்லி மற்றும் புதினா உடன் வெள்ளரிக்காய் ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம்.
நீங்களும் முடி வளரவில்லை என்று கவலையுடன் இருக்கிறீர்களா? எனில், இவற்றை முயற்சி செய்து பார்க்கலாமே.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation