Rainy Season Drink: மழைக்காலங்களில் சளி மற்றும் இருமலில் இருந்து காப்பாற்றும் பானம்

மழைக்காலத்தில் சளி, இருமலால் மக்களை அடிக்கடி அவதிப்படுத்த செய்கிறது. இதை தவிர்க்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இந்த இஞ்சி பானத்தை குடித்து வரலாம்

Ayurvedic Natural Home Remedies for Cough & Cold

கடுமையான வெப்ப காலத்திற்கு பிறகு பருவமழை சற்று நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இது பல உடல்நலப் பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் மக்கள் அடிக்கடி அவதிப்படுகின்றனர். மாறிவரும் காலநிலைக்கு மத்தியில் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது அவசியம். பருவகால நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தவிர்க்க, வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். வானிலை மாறும்போது நமது வீட்டு தாய்மார்கள் உணவு மற்றும் பானங்களில் சில நோய் எதிர்ப்பு சக்திகளை சேர்த்து உடலை ஆரோக்கியமாக இருக்க செய்வார்கள். அவற்றின் நன்மைகள் பற்றி நாம் அறியாமல் இருக்கலாம். அதை பற்றி பார்க்கலாம்

சில சிறப்பு பானங்கள், மருந்து உருண்டைகள் மற்றும் பல லேகியங்கள் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. மாறிவரும் காலநிலையில் வரக்கூடிய சளி மற்றும் இருமல் பற்றி கவலையில் இருக்கிறீர்களா அல்லது சளி, காய்ச்சலால் அவதியில் இருக்கிறீர்களா, இந்த ஸ்பெஷல் பானத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் இதை செய்வது மிகவும் எளிதானது மற்றும் இதில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் மருத்துவ குணங்கள்

துளசி, இஞ்சி, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டையால் செய்யக்கூடிய பானம்

cold inside ()

  • துளசிக்கு வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
  • துளசி இலைகள் ஒரு சூடான விளைவைக் கொண்டுள்ளன. இதில் யூஜெனோல் உள்ளதால் சளி மற்றும் மார்பில் குவிந்திருக்கும் சளியைக் குறைக்கிறது. இது சுவாச பிரச்சனைகளையும் நீக்குகிறது.
  • துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் துத்தநாகத்தின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
  • இஞ்சி பல வகையான தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி பருவகால நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • இஞ்சி செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் நீக்குகிறது.
  • இது பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் வலியிலிருந்தும் நிவாரணம் தருகிறது.
  • அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட், கிருமி நாசினிகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் உள்ளன.
  • இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. குறிப்பாக தொண்டை நோய்த்தொற்றை குணப்படுத்த உதவுகிறது.
  • இலவங்கப்பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சியின் கஷாயம் தொண்டை புண் மற்றும் சளியை குறைக்கிறது.

பானம் செய்ய தேவையான பொருட்கள்

cold new inside

  • துளசி இலைகள் - 8-10
  • இஞ்சி - அரை அங்குலம்
  • மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
  • இலவங்கப்பட்டை தூள் - 2 சிட்டிகை

செய்முறை

மேலும் படிக்க: ஆரோக்கியமான வாழ்விற்குத் தினமும் இந்த கீரைகளில் ஒன்றையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

  • அனைத்து பொருட்களையும் 2 கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும்.
  • பாதி இருக்கும் வரை கொதிக்க வைக்கவும்.
  • இப்போது அதை வடிகட்டவும் குடிக்கலாம்.
  • உங்கள் ஆரோக்கியமான டிகாக்ஷன் தயார்.
  • இதை ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.

மழைக்காலத்தில் சளி மற்றும் இருமலைத் தவிர்க்க, இந்த பானத்தின் உதவியைப் பெறலாம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP