
சில தருணங்களில் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எனக்கு கோபம் வந்தால் என்ன செய்வேன் என்றே தெரியாது, நான் பெரிய கோபக்காரன் உனக்கு தெரியுமா என சொல்வதை பார்த்திருப்போம். குழந்தைகள் சொல்லும் போது சிரிப்பாகவும் வேடிக்கை ஆகவும் இருக்கும். ஆனால் சிலர் கோபம் கொள்வதற்காக பிறந்தவர்கள் போல செய்வார்கள். கோபப்படுவதை பெருமையான விஷயமான கருதாமல் கேவலமான விஷயமாக கருதினால் நமக்கு கோபமே வராது.

தார்மீகமான கோபம் என்பது எல்லோருக்கும் இருக்க வேண்டிய விஷயமே. எனினும் காரணம் இன்றி தேவையில்லாமல் அடிக்கடி கத்தி கத்தி உடல் ஆரோக்கியத்தை கெடுப்பது அவசியமற்ற கோபமாகும். சரி கோபத்தை குறைக்க என்ன செய்யலாம் என கேள்வி எழுகிறதா ? கோபத்தை அடக்க இந்த நான்கு விஷயங்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கோபத்தில் கத்தும் முன்பாக உங்களைச் சுற்றி யாரெல்லாம் இருக்கிறார்கள் என ஒரு முறை பாருங்கள். இந்த இடத்தில் கோபப்பட்டால் நம் மீது இருக்கும் மரியாதை கெட்டுப் போகும் என்பதை உணர்ந்துவிட்டால் அந்த இடத்தில் நாம் கோபப்படமாட்டோம். எனவே கோபப்படும் முன்பாக கொஞ்சம் யோசிக்கவும்.
கோபப்பட வேண்டாம் என முடிவெடுத்து விட்டால் அந்த இடத்தை விட்டு நகர்வது நல்லது. அந்த இடத்தில் நாம் இருக்கவே கூடாது. இடத்தை விட்டு நகரும் போது கோபப்படுவதற்கான சூழல் அமையவே அமையாது.
நீங்கள் முக்கியமான விஷயத்தை விவாதிக்க வேண்டியுள்ளது, அங்கிருந்து நகர முடியாத சூழல் இருக்கின்ற போது கோபத்தில் தப்பித் தவறியும் வார்த்தையை விட்டு விடக் கூடாது. நாம் தரையில் கொட்டி நெற்பயிர்களை கூட அள்ளி விடலாம். ஆனால் கோபத்தில் பேசிய சொற்களை திரும்ப பெற முடியாது. கோபத்தில் நாம் பேசும் வார்த்தை பிறருக்கு பெரும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தும். கோபத்தில் என்ன வார்த்தைகளை பேசுகிறோம் என்றே நமக்கு தெரியாது. பேசிய பிறகு யோசித்தால் என்னவெல்லாம் பேசக் கூடாதோ அவை அனைத்தையும் பேசி இருப்போம். எனவே முடிந்தவரை வாயை திறக்காதீர்கள்.
நான் கோபப்படுவதை விரும்பவில்லை எனினும் எதிரில் இருக்கும் நபர் செய்யும் விமர்சனங்கள் எனது கோபத்தை தூண்டுகிறது. இதற்கு பதில் சொல்லக் கூடாதா என நீங்கள் நினைப்பது நியாயமான விஷயம். ஆனால் அப்போதும் நாம் அமைதியாகவே இருக்க முயற்சிக்க வேண்டும். விமர்சனம் செய்பவர்களுக்கு அது ஒன்று மட்டுமே வேலை. ஆனால் நமக்கு பல உருப்படியான வேலைகள் இருக்கிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து அமைதியாக நகர்ந்து விடவும்.
இந்த நான்கு விஷயங்களை உங்களால் செய்ய முடிகிறது என்றால் நீங்கள் பக்குவப்பட்ட மனிதர் என அர்த்தம். தினமும் தியானம் செய்தாலே மேற்கண்ட நான்கு விஷயங்கள் எளிதாகிவிடும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com