
மாதவிடாய் நாட்களில் வலு இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது, அவற்றில் வலி ஏற்படுவதால் இனப்பெருக்க ஆரோக்கியம் மந்தமாக இருப்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்றும் நம்புகிறார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா தாங்க முடியாத வலி அல்லது அசௌகரியத்திற்கு நீங்கள் விரும்பி உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளின் விளைவுகள் மிக முக்கிய காரணம். உங்கள் மாதவிடாயை மோசமாக்கும் சில பொதுவான உணவுகளை பற்றி பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மார்பகங்கள் நச்சுன்னு அழகாக தெரிய அளவை அதிகரிக்கும் உணவுகள்

நம்மில் பலரும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை அதிகம் சாப்பிட விரும்புகிறோம் அவை சுவையாக இருக்கும், ஆனால் அவை சோடியம் நிறைந்த (உப்பு) உணவுகள். அவற்றையே நாம் உட்கொள்வதால் உடலில் தண்ணீர் தேங்குதல், வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி போன்றவை ஏற்படும். வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
மாதவிடாய் சுழற்சியின் போது உடலில் ப்ரோஸ்டாக்லாண்டின்கள் எனப்படும் ஒரு கலவையை உற்பத்தி செய்யப்படுகிறது, இது கருப்பை சுருங்கி மாதவிடாய் ஓட்டத்தை ஏற்படுத்தும் கருப்பையில் இருக்கும் நச்சுகளை அகற்ற உதவுகிறது. இந்த நேரத்தில் இறைச்சியை உட்கொள்வதால் மேலும் அதிகப்படியான இரத்தபோக்கு மற்றும் வலிகளை அதிகரிக்க செய்யும்

மாதவிடாய் காலத்தில் அதிகமாக காஃபி சார்ந்த பானங்களை குடிப்பதை தவிற்க வேண்டும். தீவிர வயிற்று வலி அல்லது வீக்கத்தால் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் காஃபி உடலில் தண்ணீரை தக்க வைக்கும் அதன் காரணமாக வயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவதன் மூலம் குடல் இயக்கத்தைத் தடுக்கிறது. இதனால் தலைவலியை ஏற்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 1 முதல் 2 காஃபிகள் குடிப்பது நல்லது.
மாதவிடாய் நாட்களில் சிலர் வலி இருப்பதால் சாப்பிட முடியாமல் இருப்பதால் பசியை குறைக்க இனிப்பு சார்ந்த உணவுகளை தேடுகிறார்கள் மிட்டாய்கள், பால் சாக்லேட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை சாப்பிட விரும்புகிறார்கள். இதைச் செய்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மனநிலையையும் பாதிக்கும். மாதவிடாய் நாட்களில் இனிப்பு எடுத்துக்கொள்வது உடலில் திடீரென ஆற்றல் அதிகரிக்கும் உடனே அது குறைந்துவிடும். இப்படி உடலில் எற்ற இறக்கங்கள் ஏற்படுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஆல்கஹால் எடுத்துக்கொள்வதால் மாதவிடாய் நாட்களில் உங்கள் உடலில் நீரிழப்புக்கு ஆளாக்கும். இது வீக்கம், வயிறு வலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைத் தூண்டும். உங்கள் மனநிலையை உடனடியாக உயர்த்தலாம், தலைவலி, பிடிப்புகள் மற்றும் உடல் வலியை மோசமாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இதயம் நோய் வருவதை முன்கூட்டியே கண்டறிய சில அறிகுறிகள்
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com