herzindagi
weight loss big image

வீட்டு சமையலை வைத்தே 1 மாதத்தில் 4 கிலோ எடையை குறைக்கலாம்... எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க

வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டாலே உடல் எடையை எளிதில் குறைக்கலாம். சரியான நேரத்தில் சரியான அளவில் உணவை சாப்பிட வேண்டும்
Editorial
Updated:- 2024-05-13, 20:34 IST

உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்கவோ, பிடித்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே அல்லது ஆடம்பரமான உணவுகளில் பணத்தை செலவிடவோ தேவையில்லை. வீட்டில் சமைக்கப்படும் உணவைப் பயன்படுத்தி உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். வீட்டில் சமைக்கப்படும் உணவில் சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவை சரியான முறையில் சரியான அளவில் மற்றும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். வீட்டில் தயாரிக்கப்படும் உணவைப் பயன்படுத்தி எப்படி உடல் எடையைக் குறைக்கலாம் என்று பார்க்கலாம். இங்கே நாங்கள் உங்களுக்கு ஒரு உணவுத் திட்டத்தைப் பற்றி கூறுகிறோம். வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய அனைத்துப் பொருட்களும் இந்த டயட் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்து டயட்டீஷியன் ராதிகா கோயல் கூறியிருப்பதை பார்க்கலாம். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்.

மேலும் படிக்க: சியா விதைகளை இளநீரில் கலந்து குடித்தால் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்!

இந்த டயட் ப்ளான் 1 மாதத்தில் எளிதில் உடல் எடையை குறைக்க உதவும்

காலை உணவு திட்டங்கள் 

break fast inside

  • காலை 7-8 மணிக்குள் 1 கிளாஸ் சீரகம் தண்ணீர் அல்லது 1 கிளாஸ் வெந்தய விதை தண்ணீர் அல்லது 1 டம்ளர் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கவும்.
  • செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இந்த பானங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்த தண்ணீரை குடிப்பதால் உடல் எடை எளிதில் குறையும்.
  • காலை உணவாக குயினோவா அல்லது வெஜ் போஹா சாப்பிடலாம். இது தவிர பனீர் மற்றும் கடலை பருப்பு அடை கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.
  • காலை உணவில் முட்டையை சேர்ப்பதாக இருந்தால் 2 முட்டைகள் கொண்ட ஆம்லெட் சாப்பிடலாம்.
  • இந்த காலை உணவு புரதச்சத்து நிறைந்தவை மற்றும் எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய உணவு திட்டங்கள்

  • மத்தியான உணவின் போது சுமார் 12 மணிக்கு சியா விதைகள் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனுடன் 5 ஊறவைத்த பாதாம், சில பருப்புகள் மற்றும் 1 பருவகால பழங்களை சாப்பிடுங்கள்.
  • இவை அனைத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் உடலுக்கு பலம் தருகின்றன.
  • மதியம் 1-2 மணிக்குள் மதிய உணவு சாப்பிட வேண்டும். மதிய உணவில் முதலில் 1 தட்டு சாலட் சாப்பிடுங்கள். அதன் பிறகு காய்கறி அதிகம் நிறைந்த சாதம் மற்றும் தயிர் சாப்பிடுங்கள்.
  • இது தவிர 2 இட்லி, சாம்பார், சட்னி சாப்பிடலாம்.
  • மக்கானா/பப்பாளி/தர்பூசணி அல்லது வேகவைத்த முட்டையை சிற்றுண்டியாக சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க: இந்த அறிகுறிகள் பெண்களுக்கு இருந்தால் கண்டிப்பான கால்சியம் குறைபாடாக இருக்கும்

இரவு நேர உணவு திட்டங்கள்

indian diet inside

  •  இரவு உணவில் 1 கிண்ண மூங் தால் கிச்சடி சாப்பிடுங்கள்.
  • இது தவிர ஓட்ஸ் உப்மா அல்லது வெஜ் கிச்சடி சாப்பிடலாம்.
  • நீங்கள் எதையும் சாப்பிட விரும்பவில்லை என்றால் ராகி மற்றும் காய்கறி சூப் குடிக்கலாம்.
  • இது தவிர ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். மேலும் சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட எதையும் சாப்பிட வேண்டாம்.

இந்த உணவுத் திட்டம் உடல் எடையை குறைக்க உதவும். வீட்டிலேயே எளிதாக பின்பற்றலாம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com