Foods For PCOD: கருப்பை பிரச்சனை உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கருப்பை பிரச்சனை உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

foods for pcod

சமீபத்திய மருத்துவ ஆய்வின் படி இந்தியாவில் 20 வயது முதல் 29 வயது உட்பட்ட சுமார் 16 சதவீத பெண்கள் பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலிசிஸ்டிக் ஓவரி சின்றோம் (பிசிஓஎஸ்) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசிஸ் (பிசிஓடி) என்பது பெண்களின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை என்று கூறலாம். இதனால் சில பெண்களுக்கு கருப்பையில் நீர் கட்டிகள் உருவாகலாம். மேலும் இந்த பிசிஓடி பிரச்சனை இருந்தால் கருத்தரிப்பதில் சிக்கல், உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியமற்ற உணவு முறையும் வாழ்க்கை முறையும் தான் இந்த உடல்நல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் நாளடைவில் எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். பிசிஓடி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சில ஆரோக்கியமான உணவுகளை அன்றாட உணவு முறையில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அது என்ன உணவுகள் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

காய்கறி, கீரை வகைகள்:

கருப்பை ஆரோக்கிய பிரச்சனை உள்ள பெண்கள் தினசரி உணவில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு முறை ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த காய்கறிகளில் வைட்டமின் பி சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உடலுக்கு நன்மைகள் அளிக்கிறது. குறிப்பாக பிசிஓடி அறிகுறி பிரச்சனைகளை கட்டுப்படுத்த இந்த காய்கறிகளும் கீரை வகைகளும் பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள் மற்றும் இரும்பு சத்து அதிகம் நிறைந்த கீரை வகைகளும் நம் உடலில் இன்சுலின் கட்டுப்பாடு மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இது பெண்கள் கருவுறுதலுக்கு ஆதரிக்கும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து என்று கூறப்படுகிறது.

பிசிஓடி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் தினசரி உணவில் அடிக்கடி பருப்பு வகைகளை சேர்த்து சாப்பிட்டு வரலாம். கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு, பீன்ஸ், துவரம்பருப்பு, பட்டாணி, சோயா பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உணவு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அதேப் போல இந்த பருப்பு வகைகளில் கொழுப்புகள் இல்லை என்பதால் உடல் எடையை பராமரிக்க பெரிதும் உதவும். இந்த பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்திருப்பதால் சாலட் போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

பெர்ரி பழங்கள்:

நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த பெர்ரி பழங்களில் நிறைந்துள்ளது. இந்த பழங்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் நிரம்பியுள்ளது. பிசிஓடி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெர்ரி பழங்கள் அதிக அளவு நன்மை பயக்கும். இந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதோடு நீரிழிவு மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளை நாளடைவில் குணப்படுத்தலாம். மேலும் உடல் நல பிரச்சனைகளை தவிர்க்க ஸ்ட்ராபெரி மற்றும் ப்ளூபெர்ரி பழங்களை தயிருடன் சேர்த்து தினசரி சாப்பிட்டு வரலாம்.

ஓட்ஸ்:

oats ()

பிசிஓடி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களும், கருப்பை ஆரோக்கிய பிரச்சனை உள்ள பெண்களும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், தையமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓட்ஸ் சாப்பிட்டு வரலாம். இது கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு சிறந்த உணவு ஆகும். நம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க ஓட்ஸ் பெரிதும் உதவுகிறது. உங்கள் தினசரி உணவில் ஓட்ஸ் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிசிஓடி பிரச்சனையால் ஏற்படும் முடி உதிர்வு நாளடைவில் குணமாகும். எனவே கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த ஓட்ஸில் தண்ணீர் அல்லது பால் சேர்த்து கொதிக்க வைத்து, தினமும் காலையில் உணவாக சாப்பிட்டு வரலாம். தேவைப்பட்டால் இந்த ஓட்ஸ் உணவுடன் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை சேர்த்து சாப்பிடலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP