நம் உணவுப்பழக்களின் மாற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தைராய்டு நோயாளிகளின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தைராய்டு சுரப்பி ஒரு பட்டாம்பூச்சியின் வடிவத்தை கொண்டது. இது உடலின் ஒரு முக்கிய சுரப்பியாகும். இந்த சுரப்பி நம் கழுத்தின் அடி பாகத்தில் இருக்கிறது. நம் வளர்சிதை மாற்றம் சரியானபடி செயல்பட உதவுகிறது.
ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு தைராய்டின் ஆரோக்யம் நல்லபடியாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு மற்றும் மன அழுத்தம் ஆகிய வாழ்கை முறை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளால் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருமே வயது வரம்பின்றி தைராய்டு பிரச்சினையை சந்தித்து கொண்டு இருக்கின்றனர்.
ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் இதை பற்றிய தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவலை பகிர்ந்த இவர், தன் தலைப்பாக எழுதி இருப்பது, இந்த 3 சிறந்த உணவுகளும் (ஹைபோ மற்றும் ஹைபர் தைராய்டு) இரண்டுக்கும் நல்லது. இந்த கட்டுரையில் இந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதுவும் உதவலாம்:மாதவிடாய் வலியைப் போக்கும் ஆயுர்வேத ரெசிபி!!
நெல்லிக்காய் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த பொருள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது நம் தைராய்டு ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்? நெல்லியின் வைட்டமின் C அளவு ஆரஞ்சு பழத்தை விட 8 மடங்கு அதிகம் மற்றும் மாதுளம் பழத்தை விட 17 மடங்கு அதிகமாகவும் இருக்கிறது. தலைமுடிக்கான டானிக் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நரை முடியை தடுக்கிறது,பொடுகை ஒழிக்கிறது, மயிர்கால்களை பலமாக்குகிறது மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு தலைமுடியை நன்கு வளர செய்கிறது.
1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சுத்தமான தேனில் கலக்க வேண்டும் அல்லது நெல்லிக்காய் சாறை வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்க வேண்டும். இதை காலை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் பருக வேண்டும்.
வாழை பழத்தில் வைட்டமின் B6 அதிகம் இருந்தாலும், வாழை வைட்டமின் Cயின் உறைவிடமாக இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் நிறைந்து காணப்படுகின்றன.
வாழைப்பழம் ஒரு சாதாரண பழம் போல் தெரிந்தாலும், அதற்கு தைராய்டு அறிகுறிகள், அதன் தாக்கம் போன்ற எதையுமே இல்லாமல் செய்யும் சக்தி வாய்ந்த தன்மைகள் இருக்கின்றன. வாழைப்பழம் தைராய்டு பிரச்சினையின் அறிகுறிகளான நரம்பு பழுதடைதலை சரி செய்கிறது. மேலும் நரம்பு பிரச்சனைகளை முற்றிலும் நீக்கி விடுகிறது. ஹைபோ தைராய்டிசம் பிரச்சனைக்கு வாழைப்பழம் சிறந்த தீர்வு தரும். எனவே வாழைப்பழத்தை எந்த பயமும் இல்லாமல் சாப்பிடலாம்.
குறிப்பு: சைனஸ், சளி, இருமல், உடல் பருமன் அல்லது நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதை தவிர்க்கலாம் அல்லது கவனத்துடன் சாப்பிடலாம்.
தைராய்டு பிரச்சினையால் அவதிப்படும் பெண்களுக்கு ஒரு அருமருந்து தேங்காய் மட்டுமே. தேங்காய் மெதுவாக மற்றும் பலவீனமாக இருக்க கூடிய வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
1-2 ஸ்பூன் வெர்ஜின் கோல்ட் ப்ரஸ்ட் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். தைராய்டு பிரச்சினைக்கு நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளோ வேறு எந்த விஷயங்களோ சம்பந்தப்பட்டு இருந்தாலும், நீங்கள் உட்கொள்ளும் உணவு வகைகளும் பங்கு வகிக்கிறது. ஹைபோ மற்றும் ஹைபர் தைராய்டிசம் உள்ளவர்கள் மாத்திரைகளுடன் சேர்ந்து சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இதுவும் உதவலாம்:சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு இந்த ஒரு பானம் போதும்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com