herzindagi
home remedies for stomach pain problem

தீராத வயிற்று வலிக்குத் தீர்வு காணும் வெந்தயம்!

<span style="text-align: justify;">வெந்தயத்தில் உள்ள ஃ.பிளாவனாய்டுகள் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக உள்ளது.</span>
Editorial
Updated:- 2024-05-30, 07:52 IST

நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவுப்பொருட்களிலும் ஏராளாமான மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. அவற்றைத் தங்களது வாழ்நாளில் ஒரு அங்கமாக மாற்றியதன் பயன் தான் 100 வயதானாலும் அவர்கள் கம்பீரமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆண்கள் முதல் பெண்கள் வரை ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைத் தான் பின்பற்றினார்கள். ஆனால் இன்றைக்கு நாம் கிடைக்கும் உணவுப்பொருட்களைச் சாப்பிடுகிறோம். இதோடு மட்டுமல்ல, உடலுக்குக் கேடு என்று தெரிந்தாலும் கூட சில உணவுப்பொருட்களைச் சாப்பிடுவதை நிறுத்த மாட்டோம். இதனால் தான் பல இளம் வயதிலேயே பல நோய்களை நாம் விலைக்கொடுத்து வாங்கி வருகிறோம்.

இதில் முக்கியமான ஒன்று தான் வயிற்று வலி. என்ன தான் வயிற்று வலிக்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் அதெல்லாம் அந்த நேரத்திற்கு மட்டும் தான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். வாழ்நாள் முழுவதும் வயிற்று வலி உள்ளிட்ட வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றால், இதோ வெந்தயம் சாப்பிடுவதை உங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தளவிற்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதோ அவை என்னென்ன? என்பது என்பது குறித்து விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள். 

home remedies for stomach pain

வயிற்றுவலிக்குத் தீர்வாக அமையும் வெந்தயம்:

  • வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்புப் பண்புகள், ஆன்டி- ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. 
  • இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது. இதை நீங்கள் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதன் தண்ணீருடன் சேர்த்துக் குடிக்கலாம். ஒருவேளை நீங்கள் இரவில் வெந்தயத்தை ஊற வைக்க மறந்துவிட்டீர்கள் என்றால் காலையில் புளித்த தண்ணீருடன் வெந்தயத்தைக் குடிக்கலாம். 
  • இதை வயிறு வலிக்கும் நேரத்தில் மட்டுமல்ல, தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.  இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வரும் போது, இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலியைக் குறைக்கும். வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்புகள் போன்ற தொந்தரவுகளைச் சரிசெய்ய உதவியாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலியை மட்டுமல்ல, உடல் சூடாக இருந்தாலும் வெந்தயம் அதற்கு நல்ல தீர்வாக அமையும்.  

fenugreek seeds benefits

வெந்தயத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:

  • வயிற்று வலிக்கு மட்டுமல்ல, வெந்தயத்தில் இயற்கையாகவே ஆன்டாக்சிட் பண்புகள் அதிகளவில் உள்ளது. இது செரிமான சக்தியை வலுப்படுத்துவதோடு வயிறு வீக்கம், வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளைத் தீர்வு காண உதவியாக உள்ளது.
  • வெந்தயத்தில் உள்ள ஃ.பிளாவனாய்டுகள் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக உள்ளது.
  • உடல் நலத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்திற்கும் வெந்தயம் பேருதவியாக உள்ளது. இதில் உள்ள டியோஸ்ஜெனின், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதோடு முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்களும் சீயக்காய், ஷாம்புவிற்குப் பதிலாக வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துப் பயன்படுத்தலாம்.

Image source - Google 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com