“அய்யோ, வெயில் தாங்க முடியல” என்ற வார்த்தையை இன்றைக்கு நம்மில் பலரும் உபயோகித்து இருப்போம். ஆம் அந்தளவிற்கு வழக்கத்திற்கு மாறாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த வெயிலின் தாக்கம் ஒட்டுமொத்த உடல் நலத்தைப் பாதிக்கும் காலம் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக இந்த பருவ காலத்தில் சருமம் மற்றும் தலைமுடிக்கு கவனம் செலுத்தும் நாம், கண் பராமரிப்பைத் தவறவிடுகிறோம்.
கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தால் கண்களில் அரிப்பு, சிவத்தல், கண்களில் நீர் வடிதல் உள்பட கண் அலர்ஜி பாதிப்புகளை அதிகரிக்கும். இதை முறையாக கவனிக்காவிடில் விழித்திரை பாதிப்பைக் கூட ஏற்படுத்தும் என்பதால் கோடை காலத்தில் கட்டாயம் கண்களைப் பராமரிக்க வேண்டும். இதோ எப்படி? என்பது குறித்த முழு விபரம் இங்கே.
UV கண்ணாடி அணிதல்:
கோடை காலத்தில் கண்களுக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதால், UVA மற்றும் UVB கதிர்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடிய உயர்தர தரமான கண்ணாடிகளை அணிய வேண்டும். இதுபோன்ற கண்ணாடிகளை ஸ்டைலுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணத்தைத் தவிர்த்து கண்களைப் பாதுகாக்கத் தான் என்ற மனநிலைக்கு வாருங்கள்.
சுய பாதுகாப்பு:
சுட்டெரிக்கும் வெயிலிருந்து தப்பிக்க நீச்சல் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நீச்சல் குளங்களில் உள்ள குளோரின் மூலம் கண்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். எனவே நீர்நிலைகளிலிருந்து வழக்கமான தண்ணீரில் உங்கள் கண்களை நன்கு துவைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
அதிக தண்ணீர் குடிக்கவும்:
உடல் சூட்டைக்குறைக்க மட்டுமல்ல கண்களைப் பாதுகாக்கவும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ மற்றும் நீரேற்றம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கும் போது கண்கள் சிவத்தல், கண் அரிப்பு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
ஓய்வு அவசியம்:
கோடைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் கண்களுக்கு ஓய்வு அவசியம். குறைந்தது 8-9 மணி நேரம் தரமான தூக்கத்தைப் பின்பற்ற வேண்டும். இதோடு கணினி பயன்பாட்டைப் பயன்படுத்தும் போது 5-10 நிமிடங்கள் ஒவ்வொரு மணி நேரமும் இடைவெளி எடுத்து டிஜிட்டல் சாதனங்களை உபயோகிக்கவும்
நண்பகல் நேரத்தைத் தவிர்த்தல்:
கோடைக்கால வெயிலிருந்து உங்களது கண்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், மதியம் 12 மணி முதல் 2 மணி வரை வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளியில் செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டால் குடை, தொப்பி, கண்களைப் பாதுகாக்க கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க:குழந்தைகளுக்கு அதிகரிக்கும் அம்மைக்கட்டு நோய்;பாதிப்பைத் தடுக்க செய்ய வேண்டியது?
சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல்:
கோடை வெயிலிருந்து தப்பிக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவோம். அதேசமயம் கண்களைச் சுற்றி லோஷனைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கண்களில் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
Image source- Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation