Mumps Disease: குழந்தைகளுக்கு அதிகரிக்கும் அம்மைக்கட்டு நோய்;பாதிப்பைத் தடுக்க செய்ய வேண்டியது?

வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து அம்மைக்கட்டு பாதிப்பால் வீங்கியுள்ள கன்னங்களில் பூச வேண்டும்.

mumps pain in children

கோடைக்காலம் வந்தாலே பல உடல் நல பாதிப்புகள் நம்முடனே தொற்றிவிடும். குறிப்பாக இந்த வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. ஆம் சமீப காலங்களாக 9 மாத குழந்தை முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வரை அம்மை நோய் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் இந்த அம்மைக்கட்டு பாதிப்பை எப்படி கண்டறிவது? அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

mumps in child

பொன்னுக்கு வீங்கி, அம்மைக்கட்டு நோய் போன்ற பல பெயர்களைக் கொண்டுள்ள இந்த பாதிப்பு குழந்தைகளை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றாக உள்ளது. குழந்தைகளுக்கு செவி மடலுக்குக் கீழ், உள் அமைந்துள்ள உமிழ்நீர் சுரப்பி வீக்கம் ஏற்பட்டு, இரு கன்னங்களிலும் வலியுடன் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் இதைக் கண்டறிய முடியாது. அம்மைக்கட்டு பாதிப்பு ஏற்பட ஒரு வார காலத்திற்கு முன்பு இருந்தே காய்ச்சல், தலைவலி, உடல் பலவீனம், கன்னத்தில் வீக்கத்துடன் வலி போன்றவை அறிகுறிகளின் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்.

பாதிப்பு அதிகரிக்கக் காரணம்?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை விரைவாக அம்மைக்கட்டு பாதிப்பு தாக்குகிறது. இதோடு பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வரக்கூடிய உமிழ்நீர் மற்றும் இருமல், தும்மல் போன்றவற்றின் மூலமும் நோய்க்கிருமிகள் குழந்தைகளுக்கு எளிதில் பரவுகிறது. இதனால் தான் அம்மை நோய் பாதிக்கப்பட்டவுடனே தனிமைப்படுத்துவதோடு, கிருமி நாசினியான வேப்பிலை இலைகளை விரித்து படுக்கச் சொல்கின்றனர்.

பாதிப்பைத் தடுக்க செய்ய வேண்டியது?

  • பொதுவாக அம்மைக்கட்டு பாதிப்பு என்பது வெயில் காலத்தில் அதிகளவில் பரவக்கூடும். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மதிய வேளைகளில் குழந்தைகளை வெளியில் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
  • கோடை விடுமுறைக்காலத்தில் உட்புற விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். உடலில் நீரேற்றம் குறைந்தாலும் அம்மைப்பாதிப்பு அதிகம் ஏற்படும் என்பதால் தண்ணீர் அதிகளவில் குடிக்க வைக்க வேண்டும்.
  • உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க இளநீர், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை கோடைக்காலத்தில் கட்டாயம் உணவு முறையில் சேர்க்க வேண்டும்.

symptoms of mumps

இதுபோன்ற முறைகளை நீங்கள் பின்பற்றினாலும் அம்மைக்கட்டு பாதிப்பு ஏற்படும் சமயத்தில், குழந்தைகளைத் தனிமைப்படுத்தி வைப்பதோடு, வீங்கிய கன்னங்களில் சில மருத்துகளையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக செந்சந்தணத்துடன் பனங்காயின் சாறு சேர்த்து கலந்துக் கொண்டு கன்னத்தில் பூசவும். இதன் குளிர்ச்சித் தன்மை குழந்தைகளுக்கு எரிச்சலைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும். இதோடு வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து அம்மைக்கட்டு பாதிப்பால் வீங்கியுள்ள கன்னங்களில் பூச வேண்டும். இதில் உள்ள கிருமிநாசினி பண்புகள் பாதிப்பைக் குறைப்பதோடு வலியையும் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP