herzindagi
tips to  reduce stress

Tips to Reduce Stress: தினமும் மன அழுத்தம் பாடாய்ப்படுத்துகிறதா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

<span style="text-align: justify;">மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால், முதலில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற மனநிலை உங்களுக்கு வேண்டும்</span>
Editorial
Updated:- 2024-02-06, 19:18 IST

‘மன அழுத்தமா இருக்கு. ரொம்ப ஸ்ட்ராஸா இருக்கு. மனசே சரியில்லை’. என்ற வார்த்தைகளை நம்மில் பலர் அடிக்கடி பயன்படுத்தி இருப்போம். அந்தளவிற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன கஷ்டங்கள் இருக்கக்கூடும். என்ன தான் வெளியில் சந்தோஷமாக சுற்றித் திரிந்தாலும் மனதில் ஆறாத வடுக்களாக மன அழுத்தம் இருக்கக்கூடும். பல நேரங்களில் இந்த மன அழுத்தம் உங்களின் உயிரைக் கொல்லும் ஆட்கொல்லியாகக் கூட மாறக்கூடும் என்பதால் எப்போதும் மனதை நிம்மதியாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். இது உங்கள் வாழ்க்கையை மீட்டமைப்பதற்கும் மேலும் சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.  உங்களது மன அழுத்தத்தைக் குறைக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்த முழு விபரங்களை இங்கே உங்களுக்காகப் பகிர்கிறோம்.

 women stress life

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான டிப்ஸ்கள்:

மேலும் படிங்க: மாதவிடாய் காலத்தில் அதீத வயிற்று வலியா? அப்ப நீங்கள் செய்ய வேண்டியது?

  • மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால், முதலில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற மனநிலை உங்களுக்கு வேண்டும். மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை ஒப்புக் கொள்வது பலவீனத்தின் அடையாளம் அல்ல. எனவே உங்களுக்குப் பிடித்தமான நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவியைப் பெறுவது நல்லது. மற்றவர்களிடம் மனம் விட்டு பேசும் போது மனதில் உள்ள வலிகளைக் குறைக்க முடியும்.
  • தனிமையில் இருப்பதும் மன அழுத்தத்திற்கு ஒரு வழியாக அமையும். எனவே முடிந்தவரை தனிமையில் இருக்க வேண்டாம். புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது, மனதிற்குப் பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற விஷயங்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளவும்.
  • மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • சமீபத்திய ஆய்வுகளின் படி, நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு வகையினாலும் மன அழுத்தம் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் முடிந்தவரை உங்களது உணவு முறையில் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

yoga for stress

  • சரியான தூக்கம் இல்லையென்றால் தலைவலி, பதட்டம், மன சோர்வு ஏற்படும். ஒரு நபர் தினமும் 7-8 மணி நேரமாவது தூக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் காலையில் எழுந்திருக்கும் போது நாள் முழுவதும் சோர்வாக இருப்பதோடு, எந்த வேலை செய்தாலும் பதட்டம் ஏற்படக்கூடும்.
  • மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால், பிடித்த இடங்களுக்கு தனிமையிலோ? அல்லது உங்களது நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பயணிக்கவும். வெகு தூரம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அருகாமையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

மேலும் படிங்க: சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை செய்து விடாதீர்கள்!

 

Travel with friends

  • இது போன்ற எளிய மற்றும் பயனுள்ள வழிகளை உங்களது நாளின் வழக்கமான பகுதியாக மாற்றிக் கொள்ள முயற்சித்தாலே மன நலனை மேம்படுத்தவும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com