herzindagi
Home remedies for periods pain

Remedies For Period Pain: மாதவிடாய் காலத்தில் அதீத வயிற்று வலியா? அப்ப நீங்கள் செய்ய வேண்டியது?

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு தசைப்பிடிப்புகள் அதிகளவில் ஏற்படும். இந்நேரத்தில் நீங்கள் அடிவயிற்றிற்கு சுடு தண்ணீர் ஒத்தனம் கொடுக்க வேண்டும்
Editorial
Updated:- 2024-02-05, 16:03 IST

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத நிலையாகும். எளிதில் கடந்து செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் பல நேரங்களில் நாம் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியை அனுபவிக்கத் தான் நேரிடும். இந்நேரத்தில் ஹார்மோன் மாற்றங்களினால் பெண்களின் மனநிலை முதல் உடல் ரீதியாக பல மாற்றங்களை அனுபவிக்க நேரிடும். குறிப்பாக எரிச்சல் மற்றும் அனைவரிடமும் சண்டை போடும் மனநிலை முதல் குமட்டல், முதுகுவலி, தசை பிடிப்பு, அதீத வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

period pain remedies

மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது? 

பெண்களுக்கு மாதந்தோறும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மாதவிடாய் நிகழ்வு ஏற்படுகிறது. குறிப்பாக கர்ப்பப்பை உட்சுவர் மற்றும் கருமுட்டை அண்டவிடுப்பிற்கான காத்திருக்கும் நேரத்தில், விந்தணு ஏற்காத போது தான் பெண்களுக்கு இரத்தப் போக்கு ஏற்படுகிறது. மேலும் அந்த சமயத்தில்பெண்களுக்கு prostaglandin எனப்படும்  ஹார்மோன் சுரக்கும் மற்றும் இரத்தப் போக்கு வெளியேறுவதற்காக உடல் உறுப்பு சுருங்கி விரியும் போது பெண்கள் வலியை அனுபவிக்க நேரிடும். சில பெண்களுக்கு  prostaglandin எனப்படும்  ஹார்மோன் அதிகளவில் சுரக்கும், சிலருக்கு குறைவாக சுரக்கும் போது அதற்கேற்ப வலியை பெண்கள் உணர்வார்கள். 

மாதவிடாய் வலியைக் குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்:

  • பெண்களின் மாதவிடாய் வலிக்கு சிறந்த தீர்வாக உள்ளது கொய்யா இலை. பிஞ்சு கொய்யா இலைகளை எடுத்துக்கொண்டு, ஒரு பாதியளவு தண்ணீர் ஊற்றி நன்கு வற்றும் வரை கொதிக்க விடவும். பின்னர் இந்த சாறை வடிகட்டி மாதவிடாய் காலத்தில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் சாப்பிடும் போது வலிக்குத் தீர்வாக அமையும்.

guava leaves tea

  • வெந்தயம், பெருஞ்சீரகம் மற்றும் பூண்டு தட்டிப் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தாலும் வலிக்கு சிறந்த தீர்வாக அமையும்.
  • மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வு அதிகளவு இருக்கும் என்பதால், ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்துள்ள வெள்ளரி, தக்காளி, தர்பூசணி போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
  • மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு தசைப்பிடிப்புகள் அதிகளவில் ஏற்படும். இந்நேரத்தில் நீங்கள் அடிவயிற்றிற்கு சுடு தண்ணீர் ஒத்தனம் கொடுக்க வேண்டும்
  • விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து அடிவயிற்றில் மசாஜ் செய்வதன் மூலம் மாதவிடாய் வலியைக் குணப்படுத்த முடியும்.

 home remedies for period pain

இது போன்ற வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குணப்படுத்த முடியும். ஒருவேளை உங்களுக்கு அதீத வலி இருக்கும் பட்சத்தில் மருத்துவரின் அறிவுரையின் பேரில் மருந்துக்களை உட்கொள்வது நல்லது. 

 Image Credit: Google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com