ஆரோக்கியத்திற்கான காலை உணவாக நமது உணவில் அடிக்கடி நாம் முட்டை சேர்த்து கொள்கிறோம் . ஆனால் முட்டையுடன் சில உணவுப் பொருட்களைச் சேர்க்கும் போது, அதற்கு உண்டான பலன்கள் மட்டும் அதிகரிப்பது இல்லை, உடல் எடையையும் வேகமாக குறைக்கிறது.
பல சமயங்களில், மக்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற முடியாததால், உடல் எடையைக் குறைப்பது சற்று கடினமான விஷயமாக நினைக்கின்றனர். எனவே இன்று நாம் அத்தகைய சில உணவுப் பொருட்களைப் பற்றி தான் கூற போகிறோம். அவை ஆரோக்கியமானவை மட்டுமல்ல, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்க்கலாம்.
இதுவும் உதவலாம் :தினசரி சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
எல்லா கொழுப்புகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சோயாபீன் எண்ணெய் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது, தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்க உதவுகிறது. நீங்கள் தினமும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உட்கொண்டு வந்தால், உங்களால் கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ராலையும் குறைத்து கொள்ள முடியும். விருப்பப்பட்டால், நீங்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி முட்டை செய்து சாப்பிடலாம்.
பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு குடைமிளகாய் உட்பட பல வகையான குடைமிளகாய் வகைகள் உள்ளன. உங்கள் உணவில் முட்டையுடன் குடைமிளகாய் சேர்ப்பது, ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும். குடைமிளகாயில் வைட்டமின் C சத்து நிறைந்துள்ளது. இது எடையைக் குறைக்க உதவுகிறது. இத்துடன், இது கலோரிகளை கரைக்கும் திறனையும் கொண்டுள்ளது. நீங்கள் விரும்பினால், ஆம்லெட்டில் நறுக்கிய குடைமிளகாயை கலந்து கொள்ளலாம். அல்லது கேப்சிகம் எக் மசாலா போன்ற உணவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவுக்கு நிறைய காய்கறிகள் தேவை என்பது அவசியமில்லை, ஆனால் உங்கள் உணவில் சில மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொண்டால், உங்களுக்கு எக்கச்சக்கமான பலன் கிடைக்கும். இந்நிலையில், உடல் எடையை குறைக்க கருப்பு மிளகு பொடியை முட்டையின் மேல் தூவவும். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். இது உங்கள் இடுப்பு சதையை குறைக்க உதவுகிறது மற்றும் அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.
கினோவாவின் நன்மைகளை நாம் அனைவரும் அறிந்ததே. முட்டையுடன் கினோவாவை சேர்த்து முட்டை அடை செய்வது உடல் எடையை குறைக்க உதவும். இத்துடன், கினோவாவில் மற்ற தானியங்களில் இருப்பதை விட அதிக புரதம் உள்ளது மற்றும் அன்சாட்சுரேட்டட் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. உங்களுக்கு முட்டை அடை பிடிக்கவில்லை என்றால் முட்டை புர்ஜியுடன் கினோவாவை சேர்த்து சாப்பிடலாம்.
இதுவும் உதவலாம் :யாரெல்லாம் வெந்தயம் சாப்பிட கூடாது தெரியுமா?
கருப்பு பீன்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதை உட்கொண்டால் உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும் மற்றும் உடல் பருமனைக் குறைக்கவும் உதவுகிறது. தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் தொப்பை நிச்சயம் குறைந்து விடும். தொப்பை கொழுப்பைக் குறைப்பதைத் தவிர, கருப்பு பீன்ஸ் எல்டிஎல் கொழுப்பின் அளவை குறைக்கிறது. இந்த இரண்டு பொருட்களையும் உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், பல்வேறு நன்மைகளை நீங்கள் பெறலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com