சீரகம் அனைத்து இந்திய சமையலறைகளிலும் இடம்பெறும் மிகவும் பொதுவான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். நமது அன்றாட உணவிற்கு சிறந்த ருசியை கொடுப்பது மட்டுமில்லாமல் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை சேர்க்கிறது. உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை, சீரகம் உங்கள் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்யும். இந்த நன்மைகள் அனைத்தையும் அனுபவிக்க, அவற்றை உங்கள் தினசரி உணவில் நீங்கள் சேர்க்க வேண்டும்.
உங்கள் உணவில் சீரகத் தூள் சேர்ப்பது நல்லது. சாலட் சாப்பிடும் போது வறுத்த சீரகத்தை அல்லது சீரகத்தூளை தூவி விடலாம். ஒரு கிண்ணம் தயிர், ஒரு கிண்ணம் பழங்கள், சூப்கள் அல்லது சிற்றுண்டிகளில் சில வறுத்த சீரக விதைகள் அல்லது வறுத்த சீரகப் பொடியைத் தூவுவதன் மூலம் அதன் பல ஆரோக்கியம் நிறைந்த நன்மைகளை நீங்கள் பெற முடியும். இது உங்கள் உணவிற்கு அற்புதமான சுவையையும் சேர்க்கிறது. வறுத்த சீரகத்தை பொடியாக்க, முதலில் ஒரு தவாவில் சீரகத்தை வறுக்கவும். ஆறவைத்து, பிறகு மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் சில மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
இதுவும் உதவலாம் :கிராம்பு சாப்பிட்டால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?
சீரக தண்ணீர் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஒரு கப் தண்ணீரில் சீரகத்தை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை குடிக்கவும். இந்த தண்ணீரை குடிப்பது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு நலம் பயக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சூர்ணம் செரிமான பிரச்சனைகளுக்கு அருமருந்து. இது பழமையான சிகிச்சை ஆகும். வெதுவெதுப்பான நீரில் சிறிது சீரக சுரணத்தை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற பொதுவான செரிமான கோளாறுகளுக்கு நன்மை செய்கிறது. ஒரு பாத்திரத்தில் சோம்பு, சீரகம் மற்றும் வெந்தய விதைகளை சம அளவு சேர்க்கவும். ஒரு மிக்சியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து தூள் செய்யவும். இதை தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.
நீங்கள் வழக்கமாக குடிக்கும் டீக்கு பதிலாக ஆரோக்கியத்தை அள்ளி தரும் சீரக டீ குடிக்கலாம். இது உங்களுக்கு எப்போதும் வயிறு இலகுவாக உணரும் தன்மையை தரும், மேலும் செரிமானத்திற்கு சிறந்ததாகவும், நெஞ்செரிச்சலைத் தடுக்கவும் உதவுகிறது. ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும். இந்த தண்ணீரை ஒரு கொதி விட வேண்டும். மஞ்சள் நிறம் மாறியதும் வடிகட்டி அதிகமான உணவு சாப்பிட்ட பிறகு குடிக்கலாம் அல்லது வெறும் வயிற்றில் கூட உட்கொள்ளலாம்.
சீரக விதைகள் செரிமான சாறுகளை சுரக்க காரணமான என்சைம்களை தூண்டி விட உதவுகிறது. தினமும் இதை சாப்பிட வாய்வு, மலச்சிக்கல், வீக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
நீங்கள் உடல் எடை குறைக்கும் செயலில் ஈடுபட்டு இருந்தால், அதிகமான எடையை விரைவில் குறைக்க சீரகம் உதவி புரியும். தினசரி உணவில் சீரகத்தை சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும். இதில் கலோரி அளவு குறைவாக உள்ளது மற்றும் பசியை அடக்கி விடுகிறது.
சீரகத்தில் ஆன்டி வைரஸ் மற்றும் ஆன்டி பாக்டீரியா குணங்கள் உள்ளன, அவை சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. சீரகம் சுவாசக் குழாயில் இருக்கும் சளியை தளர்வடைய செய்கிறது.
சீரகம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றம் செய்ய உதவுகிறது. இது உங்கள் கல்லீரலுக்கு சிறந்த மருந்து. சீரக தண்ணீர் அல்லது டீ குடிப்பது உங்கள் உடலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.
இதுவும் உதவலாம் :தினமும் மஞ்சள் நீர் குடிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றங்களா?
ஒரு ஸ்பூன் சீரகத்தில் 4 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த சீரகம் மட்டுமே மிகுந்த பயனை தருவதாக இருக்கும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்
Image Credit : freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com