மஞ்சளின் மருத்துவ குணங்கள் யாவும் உலகளவில் புகழ் பெற்றவை. இதை நம் உணவில் சேர்த்து கொண்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இந்நிலையில் மஞ்சளை நம் ஆன்றாட உணவில் சேர்த்துகொள்ள அதை மஞ்சள் நீராகவும் குடிக்கலாம். இந்த நீர் உங்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றிவிடும்.
நம் உடலில் இருந்து நச்சுக்களை நீக்கும் செயல்முறையை டீடாக்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். சுற்றுப்புற சூழல், அசுத்தமான காற்று மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுடன் தொடர்புடைய நிலையில் நோவாய்ப்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இது போன்ற நிலைகளை தவிர்த்திட உடலில் உள்ள கழிவுகளை டீடாக்ஸ் செய்ய வேண்டும். இதன் மூலம் பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: படுத்த உடனே தூக்கம் வர இதை செய்யுங்கள்
இந்த கழிவுகள் நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு முன் அவற்றை உடலை விட்டு அகற்ற வேண்டும். இதற்கான இயற்கை வழியை தேடுகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்துவதற்கான சிறந்த வழியை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சூடான தண்ணீரில் மஞ்சள் சேர்த்து கலக்கவும். சூடு தணிந்த பிறகு இதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். இந்த நீர் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், இயற்கையான சரும பொலிவையும் பெறலாம். மஞ்சள் நீரின் நன்மைகள் பின்வருமாறு.
இன்றைய காலகட்டத்தில் பல பெண்களும் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். இதை தடுக்க மஞ்சளை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகின்றன.
மஞ்சளில் குர்குமின் எனும் வேதிப்பொருள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, உடல்நல குறைபாடுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கின்றன. இதனுடன் சளி, இருமல் போன்ற உடல் நல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முதலில் செரிமான மண்டலத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். செரிமான செயல் முறையை மேம்படுத்த உங்கள் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் நீர் குடிப்பதால் உங்கள் வளர்ச்சிதை மாற்றம் மேம்படும். இதன் மூலம் உடல் எடையை விரைவில் குறைத்திடலாம்.
மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் திசுக்களின் தேய்மானம் மற்றும் செல் சேதத்தை எதிர்த்துப் போராடுகின்றன. உங்கள் அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், வயது முதிர்வின் அறிகுறிக்களுக்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கலின் சேதத்தை தடுக்கின்றன. மஞ்சள் நீரை குடித்து வந்தால் இளமையான, பளபளப்பான சருமத்தையும் பெறலாம்.
உங்கள் உட்புற மற்றும் வெளிப்புற அழகை பராமரிக்க மஞ்சள் நீரை குடிக்கலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com