herzindagi
miscarriage big

pregnant tips: கருச்சிதைவை பற்றிப் புரிந்துகொள்வோம்! கருச்சிதைவை தடுப்போம்!

miscarriage tamil tips: கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க முடியுமா? இது சாத்தியமா? பல பயனுள்ள தகவலை படித்து பயன்பெறலாம்.
Editorial
Updated:- 2022-11-28, 12:50 IST

தன் தாய்மையின் கனவைக் கலைக்கும் இந்தக் கருச்சிதைவை, பெண்கள் எளிதாக மறப்பதில்லை.இருப்பினும் உங்கள் எதிர்கால கனவை நிஜமாக்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும். பெண்கள் மனதையும் உடலையும் பலவீனமாக்கும் இந்தக் கருச்சிதைவை தடுக்க முடியுமா? எப்படி தடுக்கலாம்?

இந்தப் பதிவின் மூலம், கருச்சிதைவை பற்றிப் புரிந்து கொண்டு தடுப்போம் வாருங்கள்.

நாம் எப்படி கருச்சிதைவை தடுக்க முடியும்?

miscarriage

பெரும்பாலான கருச்சிதைவுகள் கருவில் உள்ள மரபணு குறைபாடுகளால் ஏற்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, மரபணு குறைபாடுகளால் ஏற்படும் கருச்சிதைவுகளைத் தடுக்க முடியாது.

இருப்பினும், அனைத்து கருச்சிதைவுகளும் மரபணு குறைபாடுகளால் ஏற்படுவதில்லை. உங்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், மகப்பேறு மருத்துவருடன் கலந்தாலோசித்து உங்கள் கருச்சிதைவுக்கான காரணத்தைக் கண்டறியுங்கள். இது உங்களின் எதிர்கால கர்ப்பத்தைத் திட்டமிட உதவும். கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். கருச்சிதைவைத் தடுக்க உதவும் சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

  • கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்கள், கருத்தரிப்பதற்கு முன் குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களாவது 400 mcg ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.
  • உடற்பயிற்சி செய்யலாம்.
  • ஆரோக்கியமான, சமச்சீரான உணவைச் சாப்பிடவும்.
  • மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும்.
  • உங்கள் உடல் எடையைச் சரியான வரம்புகளுக்குள் வைத்திருக்க பாருங்கள்.

miscarriage

  • புகை பிடிப்பவர்களிடமிருந்து விலகி இருங்கள்.
  • காபி போன்ற காஃபின் பானத்தை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப்பிற்கு மேல் அதிகமாகப் பருக வேண்டாம்.
  • தடைசெய்யப்பட்ட மருந்துகளைத் தவிர்க்கவும்.
  • தடுப்பூசிகள் குறித்த தற்போதைய நிலையை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

இந்த வழிமுறைகளும் கருச்சிதைவைத் தடுக்க உதவும்

miscarriage

  • ஆர்சனிக், ஈயம், ஃபார்மால்டிஹைடு, பென்சீன் மற்றும் எத்திலீன் ஆக்சைடு போன்ற நச்சுக்கள் மற்றும் கதிர்வீச்சுகளை தவிர்க்கவும்.
  • கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் வயிற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க சிறப்பு கவனம் செலுத்தவும்.
  • கர்பப காலத்தில், மருத்துவர் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
  • எக்ஸ்-ரே மற்றும் தொற்று நோய்கள் போன்ற சுற்றுச்சூழல் அபாயங்களைத் தவிர்த்திடவும்.

நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் முன், உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் ஆரோக்கியமான குழந்தை பிறப்பை உறுதிப்படுத்த முடியும். உதாரணமாக, தன்னுடல் தாக்குமை நிலை (autoimmune response) அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக முந்தைய கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டிருந்தால், அதன் அடிப்படை காரணிகளுக்கானச் சிகிச்சைகளைப் பெறுவது நல்லது.

நீங்கள் கர்ப்பமாகிவிட்டால், ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்த, முழுமையான மகப்பேறுக்கு முற்பட்ட பராமரிப்புகளை ஆரம்பம் முதலே பெற வேண்டியது அவசியம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com