herzindagi
side effects of Sodium valproate

Side effects of Sodium Valproate: வலிப்பு, ஒற்றைத் தலைவலிக்காக சாப்பிடும் மருத்துகளால் இத்தனைப் பாதிப்புகளா?

<span style="text-align: justify;">&nbsp;கர்ப்பிணிகள் சோடியல் வால்பரேட் எடுத்துக் கொண்டால் குழந்தையின் வளர்ச்சியில் பிரச்சனைகள், பிறப்பு குறைபாடுகள் போன்றவை ஏற்படக்கூடும்.</span>
Editorial
Updated:- 2024-01-31, 12:38 IST

இன்றைக்கு 10 ல் 2 பேருக்காவது நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளின் வளர்ச்சி குறைபாடு இருந்தால், அவர்களுக்கு கை- கால் வலிப்பு பாதிப்பு ஏற்படுகிறது. பிறந்த குழந்தைகள் கூட இந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். குழந்தைகள் மட்டுமல்ல, பல நேரங்களில் பெரியவர்களும் இந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. தலையில் ஸ்கேன் செய்த பின்னர் மூளையில் நரம்புகளில் உள்ள பாதிப்பு கண்டறியப்பட்டு, நரம்பியல் மருத்துவர்களின் ஆலோசனைகளின் பெயரில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நாள்களை விட குளிர்காலங்களில் குழந்தைகள் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அதீத குளிரால் குழந்தைகளுக்கு வலிப்புகள் ஏற்படும். இதை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சோடியம் வால்பரேட் எனப்படும் வால்பரின் சிரப் மற்றும் பெரியவர்களுக்கு வால்பரின் மாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர்.

எந்த மாத்திரைகளாக இருந்தாலும் பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பு. அதே போன்று சோடியம் வால்பரேட் மாத்திரைகள் உட்கொண்டாலும் பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பக்க விளைவுகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

epilepsy disorder

சோடியம் வால்பரேட்டும் பக்க விளைவுகளும்!

 மேலும் படிங்க: எலும்புகளை வலுப்படுத்தும் ஆரோக்கிய பானங்கள்!

  • கை-கால் வலிப்பு, ஒற்றை தலைவலி மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக சோடியம் வால்பரேட் (வால்பரின்) பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை உட்கொண்டால் மட்டுமே எவ்வித பாதிப்புகளும் இன்றி வாழமுடியும். இல்லையென்றால் தொடர்ச்சியாக வலிப்புகள் ஏற்படக்கூடும். இதோடு மட்டுமின்றி 100 ல் ஒருவருக்காவது பொதுவாக சில பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 
  • சோடியம் வால்பேரட் அதிகம் உட்கொள்ளும் போது, பசியின்மை, குமட்டல், வாந்தி, தூக்க கலக்கம், முடி கொட்டுவது, எடை அதிகரிப்பு மற்று நுரையீரல் வழக்கத்திற்கு மாறான தூக்கம், உடல் நடுக்கம் போன்றவை பக்க விளைவுகள் ஏற்படும்.
  • சோடியம் வால்பரேட் மாத்திரைகளை உட்கொள்ளும் சில குழந்தைகளுக்கு உடல் சோர்வு அதிகமாக ஏற்படும். பள்ளிகளில் பாடத்தைக் கூட கவனிக்க முடியாத அளவிற்கு தூக்கம் அதிகமாகவும், எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் இருப்பார்கள். ஞாபக மறதி அதிகமாகவே இருக்கக்கூடும்.
  • கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சோடியல் வால்பரேட் எடுத்துக் கொண்டால் குழந்தையின் வளர்ச்சியில் பிரச்சனைகள், பிறப்பு குறைபாடுகள் போன்றவை ஏற்படக்கூடும்.

headPain treatment () 

மேலும் படிங்க: குளிர்காலத்தில் காது வலி ஏன் ஏற்படுகிறது? எப்படி சரி செய்வது?

எனவே இது போன்ற பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும். பின்னர் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுகளின் அடிப்படையில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Image Credit: Google

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com