புதிதாக பிறந்த குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமானது. இது அவர்களின் அனைத்து ஊட்டச்சத்து தேவையையும் பூர்த்தி செய்கிறது.
குழந்தை பிறந்ததிலிருந்து ஆறு மாதங்கள் முடியும் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும்படி WHO மற்றும் UNICEF நிறுவனங்களும் பரிந்துரை செய்கின்றன. இந்த அணுகுமுறை தாய்மார்களுக்கும் நன்மை அளிப்பதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் தெரிவிக்கிறது. ஏனெனில் இது மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய், டைப் 2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கிறது. இந்நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, தாய்மார்கள் எதிர்கொள்ளும் ஐந்து பொதுவான பிரச்சனைகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இது பாலூட்டும் தாய்மார்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக புதிதாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கும் போது முலைக்காம்புகளில் புண் ஏற்படலாம். ஏனெனில் ஆரம்பத்தில் குழந்தையை சரியாக தூக்கி, தாய்ப்பால் குடிக்க வைப்பது ஒரு சில தாய்மார்களுக்கு கடினமாக இருக்கலாம். சில நாட்களுக்கு பிறகும் வசதியாக தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்கள் இருந்தால் மருத்துவ உதவியை பெறவும்.
ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும் போதும் வலி ஏற்பட்டாலோ அல்லது முளைக்காம்புகளில் வெடிப்பு இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் இருந்தாலோ மருத்துவரை உடனடியாக ஆலோசனை செய்வது நல்லது.
தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் பொழுது மார்பக பெருக்கம் ஏற்படுகிறது. இதனால் மார்பகங்களில் இறுக்கம் மற்றும் வலியை உணரலாம். தாய்ப்பால் கொடுக்க தொடங்கிய ஆரம்ப கால நாட்களில் இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம். தாய்ப்பால் சுழற்சிக்கு நீங்களும் உங்கள் குழந்தையும் பழக்கப்பட்ட பிறகு இந்த பிரச்சனை தானாகவே குறைந்து விடும்.
தங்கள் குழந்தைகளுக்குப் போதுமான பால் கிடைக்காமல் ஒரு சில தாய்மார்கள் சிரமப்படுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசித்த பின், தாய்ப்பாலுடன் சேர்த்து ஃபார்முலா பாலையும் உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். குழந்தைக்கு சரியான இடைவெளியில் தாய்ப்பால் கொடுப்பது, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது, முறையான ஓய்வு மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்தலாம்.
முலை அழற்சி எனும் மார்பக பாக்டீரியா தொற்று ஏற்படும் போதும் காய்ச்சல் மற்றும் மார்பக அசௌகரியம் போன்ற அறிகுறிகளை உணரலாம். குழந்தை பிறந்த ஒரு சில வாரங்களில் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். இது பால் குழாய்களில் அடைப்பு, மார்பகப் பெருக்கம் அல்லது வெடிப்புகள் போன்ற பிற தாய்ப்பால் பிரச்சினைகளால் ஏற்படுகிறது, இந்த வெடிப்புகள் பாக்டீரியாவை மார்பகத்திற்குள் நுழைய அனுமதிப்பதால் நோய் தொற்றுகள் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தைராய்டை சீராக்க மஞ்சள் போதும்
தாய்ப்பால் கொடுக்கும் பொழுது நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் மருந்துகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நீங்கள் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பால் வாயிலாக குழந்தையை சென்றடையும். இந்நிலையில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் குழந்தையின் நலம் கருதி, அவர்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள்
தாய்ப்பால் கொடுக்கும் போது உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: குங்குமப்பூ நீரின் 4 அற்புத நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com