கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது, பொழுது சாய்ந்ததும் நகம் வெட்டக்கூடாது, மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்க கூடாது என காலம் காலமாக சில நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. இவை மூட நம்பிக்கையா அல்லது உண்மையில் இதற்குப் பின் காரணங்கள் உள்ளதா? பெரும்பாலும் நம் முன்னோர்கள் சொல்லிய பல விஷயங்கள் அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
அப்படி சொல்லப்பட்ட ஒரு விஷயம் தான் "மீன் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது" என்பதும். அறிவியலின்படி மீன் முறையாக சமைக்கப்படவில்லை என்றால் அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருந்தால் அல்லது மீன்/கடல் உணவுக்கு அலர்ஜி இருந்தால் மீன் மற்றும் பால் கலவையானது தடிப்பு மற்றும் சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம்: மறுபடியும் மாஸ்க் போட வேண்டிய நிலை வருமா? வெளிநாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா!
ஆயுர்வேதத்தின்படி மீன் மற்றும் தயிர் கலவையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீன் ஒரு அசைவ உணவாகும், அதே சமயம் பால் விலங்கு சார்ந்த புரதமாகவே இருந்தாலும் அது சைவ உணவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெவ்வேறு உணவு முறைகளை ஒரே சமயத்தில் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
பால் குளிர்ச்சியான விளைவை கொண்டுள்ளது, சூடான விளைவை கொண்ட மீன் சாப்பிட்ட பிறகு பாலை குடிக்கும் பொழுது உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கலவையை தவிர்க்கும் படி பல மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள், குறிப்பாக பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இந்த கலவையை தவிர்ப்பது நல்லது. இக்கலவையானது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் பலவீனப்படுத்தலாம்.
மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது விஷமாக மாறாது. இருப்பினும் இந்த கலவையானது உடல் ஆரோக்கியத்திற்கு நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். போதுமானவரை இந்த இரண்டு உணவுகளையும் ஒரே சமயத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: 40 வயதில் 30 வயதுக்கான தோற்றத்தை பெற இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com