herzindagi
image

பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? தேங்காய் பாலை இப்படி பயன்படுத்துங்க

நமது கூந்தலை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு தேங்காய் பால் எவ்வாறு பயன்படுகிறது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவை தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
Editorial
Updated:- 2025-11-02, 11:46 IST

நமது கூந்தலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஃபேட்டி ஆசிட்கள் ஆகியவை நிறைந்த ஒரு ஆற்றல் மையம் போன்று தேங்காய் பால் செயல்படுகிறது. இவை நம்முடைய உச்சந்தலைக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் இயற்கையாக அமைந்துள்ள புரதம், முடி உதிர்வை தடுக்கிறது.

மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? அரிசி தண்ணீரை இனி இப்படி யூஸ் பண்ணுங்க

 

தேங்காய் பால் பயன்படுத்தும் முறை:

 

இவ்வளவு ஆற்றல் மிக்க தேங்காய் பாலை நமது கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். அந்த வகையில், தேங்காய் பாலை சிறிதளவு எடுத்து நமது உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்யும் போது, இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு முடியின் வளர்ச்சி அதிகரிக்கிறது. இதற்கடுத்து சுமார் 20 முதல் 30 நிமிடங்களுக்கு தேங்காய் பாலை அப்படியே உச்சந்தலையில் வைத்திருக்கலாம். இது முடியின் வேர்க்கால்களுக்கு ஊடுறுவ வசதியாக இருக்கும்.

Coconut milk uses

 

மேலும், தேங்காய் பாலுடன் ரோஸ்மேரி எண்ணெய்யை சில துளிகள் சேர்த்து பயன்படுத்தலாம். இது முடியின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க உதவும். இது மட்டுமின்றி தலைமுடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராக தேங்காய் பால் செயல்படுகிறது. இவ்வாறு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தேங்காய் பாலை பயன்படுத்தினால் தலைமுடியை சீராக பராமரிக்க முடியும்.

மேலும் படிக்க: Hair fall home remedy: ஒரு முட்டை இருந்தால் போதும்... முடி உதிர்வு பிரச்சனையை போக்கலாம்; இந்த 4 ஹேர்மாஸ்கை ட்ரை பண்ணுங்க

 

கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

 

இப்படி, தேங்காய் பாலை தலைக்கு தேய்த்து பயன்படுத்தும் நாட்களில், மிதமான ஷாம்பூ கொண்டு தலைக்கு குளிக்கலாம். இது கூந்தலில் இயற்கையாக இருக்கும் எண்ணெய்யை முற்றிலும் அகற்றுவதை தடுக்கிறது. இதனால், முடிக்கு தேவையான ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், நமது கூந்தல் பார்ப்பதற்கு அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் காட்சியளிக்கும்.

Coconut milk benefits

 

குறிப்பாக, கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தேங்காய் பாலை பயன்படுத்துவதற்கு பதிலாக, நமது வீட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் பாலை பயன்படுத்தலாம். இது சுத்தமாக இருப்பதுடன் கூடுதல் நன்மைகளை அளிக்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com