calcium rich foods ()

Calcium Rich Foods: பெண்களின் கால்சியம் குறைபாட்டை நீக்கும் 3 உணவுகள்

உங்கள் உடல் வயதுக்கு ஏற்ப கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த இயற்கை உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2023-09-13, 16:03 IST

கால்சியம் உடலில் மிகுதியாக உள்ள தாதுப்பொருள் மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. உங்கள் உடலில் கால்சியம் அதிகம் உள்ளது. இந்த கனிமத்தில் சுமார் 99 சதவீதம் உங்கள் எலும்புகள் மற்றும் பற்களில் சேமிக்கப்படுகிறது. மற்ற 1 சதவீதம் உங்கள் இரத்தத்திலும் மென்மையான திசுக்களிலும் உள்ளது. இது உங்கள் எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குகிறது மற்றும் இதய ஆரோக்கியம், தசை செயல்பாடுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

தினசரி குறைந்தது 1 ஆயிரம் மில்லிகிராம் கால்சியம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. சில இளம் வயது பெண்களுக்கு, மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் வயதானவர்கள் உட்பட அதிக அளவு கால்சியம் தேவைப்படுகிறது. பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களில் குறிப்பாக கால்சியம் நிறைந்துள்ளது. ஆனால் வயதான பெண்களின் கால்சியம் குறைபாட்டை நீக்க உதவும் 3 இயற்கை உணவுகளை பற்றி இன்று பார்க்கலாம். இது தொடர்பான தகவல்களை ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

 

இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் கொத்தமல்லி இலை தண்ணீர் குடித்துவந்தால் 10 விதமான நோய் தீரும்

பொதுவாக மாதவிடாய் காலத்தில் தைராய்டு, முடி உதிர்தல், மூட்டு வலி, வளர்சிதை மாற்றக் கோளாறுகள், ஹார்மோன் பிரச்சனைகள்,  ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், போதுமான வைட்டமின் டி இல்லாததால் கால்சியம் குறைபாடு காணப்படுகிறது. வைட்டமின் டி உங்கள் உடலை கால்சியத்தை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது. வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க கால்சியம் அவசியம். போதுமான வைட்டமின் டி மற்றும் கால்சியம் இல்லாமல் குழந்தை பருவத்தில் எலும்புகள் சரியாக உருவாகாது. மேலும் எடை இழக்க நேரிடும், பலவீனமாகி, இளமைப் பருவத்தில் எளிதில் உடைந்துவிடும். எனவே குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் கால்சியம் மிகவும் முக்கியமானது. 

உடலுக்கு கால்சியத்தை தரும் 3 உணவுகள் 

நெல்லிக்காய்

calcium rich foods Amla

ஆம்லாவில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. பச்சை பழங்கள், சாறு, பொடி, சர்பத் போன்ற எந்த வடிவத்திலும் இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதுடன், இது உங்கள் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. இது தவிர ஆம்லாவில் உள்ள நார்ச்சத்து உங்கள் செரிமான அமைப்புக்கு நல்லது. உங்களுக்கு வலுவான எலும்புகள் வேண்டும் என்றால் கால்சியம் நிறைந்த நெல்லிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நெல்லிக்காயில் கால்சியம் சத்து மட்டுமின்றி, கால்சியத்தை உறிஞ்சி எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. ஆம்லா எலும்பு செல்கள் சிதைவதைத் தடுத்து எலும்புக்கு தேவையான சத்துக்களை தருகிறது. மேலும், ஆம்லாவின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

முருங்கை இலை

முருங்கை இலையில் போதுமான அளவு கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, சி மற்றும் மெக்னீசியம் உள்ளது. முருங்கையில் வளர்ச்சிக்குத் தேவையான பல தாதுக்கள் உள்ளதால், முருங்கை இலையில் இருக்கும் கால்சியம் மனித வளர்ச்சிக்கான முக்கியமான தாதுக்களில் ஒன்றாக இருக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் முருங்கை இலைப் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள்.

எள் விதைகள்

 

calcium rich foods Sesame seeds

சுமார் 1 டேபிள் ஸ்பூன் கறுப்பு/வெள்ளை எள்ளை எடுத்து, உலர் வறுத்து, ஒரு டீஸ்பூன் வெல்லம் மற்றும் நெய்யுடன் கலந்து லட்டு தயாரிக்கவும். உங்கள் கால்சியம் அளவை அதிகரிக்க இந்த சத்தான லட்டுவை தொடர்ந்து சாப்பிடுங்கள்.

கால்சியத்தின் இயற்கை ஆதாரங்கள்

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்

  • பாதாம் பால், சோயா பால், டோஃபு
  • ப்ரோக்கோலி, வெண்டைக்காய், பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகள்
  • ராகி, தினை போன்ற தானிய வகைகள். 
  • பாதாம், பிரேசில் பருப்புகள், உலர்ந்த அத்திப்பழங்கள்.
  • எள் விதைகள், சியா விதைகள், சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள்.
  • ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி, கொய்யாவில் கால்சியன் அதிகம் இருக்கிறது.

இந்த மூன்று விஷயங்களையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் கால்சியம் குறைபாட்டைப் போக்கலாம். உணவுகள் தொடர்பான இதே போன்ற தகவல்களைப் பெற, ஹர்ஜிண்டாவுடன் இணைந்திருங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: கற்றாழை சாறு குடிப்பதால் உடலில் நிகழும் 4 அதிசய நன்மைகள்

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

 

Image Credit- Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com