herzindagi
image

வாய் கசப்புக்கான காரணங்களும், விரைவில் தீர்க்க உதவும் சிகிச்சை முறைகளும்

வாய் கசப்புத்தன்மைக்கு பல காரணங்கள் உண்டு. மோசமான வாய் சுகாதாரம், மல்டிவைட்டமின் மாத்திரை சாப்பிடுவது, கர்ப்ப காலம் மற்றும் வறட்சியான வாய் காராணமாக கசதப்புத்தன்மை உணர்வோம். இதில் சில நோய் பாதிப்புகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். வாய் கசப்பு பிரச்னையை வீட்டு வைத்தியத்திலும் சரி செய்யலாம்.
Editorial
Updated:- 2025-02-11, 18:28 IST

சில நேரங்களில் பல் துலக்கிய பிறகு வாய் கசப்பை உணர்வோம். காரணம் தெரியாமல் தண்ணீர் குடிப்போம், மிட்டாய் சாப்பிடுவோம் அல்லது துர்நாற்ற பிரச்னை என நினைத்து உப்பு போட்டு பல் துலக்குவோம், வேப்பங் குச்சியில் பல் துலக்குவோம். இதையெல்லாம் செய்த பிறகும் வாய் கசக்கும். வாய் கசப்புக்கு பல காரணங்கள் உண்டு. நெஞ்செரிச்சல், வயிற்று வலி, சைனசிடிஸ், புகைப்பிடிக்கும் பழக்கம் போன்றவையும் வாய் கசப்புக்கு காரணமாகும். அடிக்கடி பல் துலக்கியும் வாய் கசப்பு தொடர்ந்தால் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

causes bitter taste in mouth

வாய் கசப்பு காரணங்களும், வீட்டு வைத்தியமும்

மோசமான வாய் சுகாதாரம்

  • காலை எழுந்த பிறகு வாய் கசப்பை உணர்ந்தால் அதற்கு எச்சையுடன் நாக்கு, பல் ஆகியவற்றில் உள்ள பாக்டீரியா போன்ற கிருமிகள் கலந்துவிட்டது என புரிந்துகொள்ளலாம்.
  • இதற்கு தினமும் இரண்டு முறை பல் துலக்கவும். காலை விழித்த பிறகு, இரவு தூங்க செல்லும் முன்பாக பல் துலக்கவும். நாக்கில் படிந்திருக்கும் கிருமிகளை அகற்றுவதும் அவசியம்.

ஆன்டிபயாடிக் மருந்து

நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் சரியாக ஜீரணம் ஆகாத போது அவை எச்சியுடன் கலக்கும். இதன் காரணமாக வாய் கசக்கும். இதய நோய்க்கு சாப்பிடும்
சில மாத்திரைகளும் வாய் கசப்பை ஏற்படுத்தும்.

மாத்திரை எடுத்த சில நாட்களுக்கு வாய் கசப்பு தெரியலாம். அதன் பிறகு பழகிவிடும்.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாய் கசப்பு ஏற்படுவது இயல்பு. கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் வாய் கசப்பு நிச்சயம் இருக்கும். ஹார்மோன் மாற்றம் காரணமாக வாய் கர்ப்ப காலத்தில் வாய் கசக்கும்.

மாங்காய், கொய்யா பழம் சாப்பிடலாம், எலுமிச்சை சாறு குடிக்கலாம்.

வைட்டமின் மாத்திரைகள்

  • ஜிங்க், காப்பர், இரும்பு, கிரோமியம் கொண்ட வைட்டமின் மாத்திரைகளால் வாயில் கசப்பு உண்டாகும்.
  • இதற்கு தீர்வு கிடையாது. பரிந்துரைக்கப்படும் வைட்டமின் மாத்திரை குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

மேலும் படிங்க  ஆரோக்கியத்துடன் வாழணுமா ? தினமும் எவ்வளவு சூரிய ஒளி நம்மீது படணும் தெரிஞ்சுகோங்க

இரைப்பை உணவுக்குழாய் பின்னோட்ட நோய்

  • சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாய்க்கு திரும்பும் போது வாய் நிச்சயம் கசக்கும்.
  • அமிலம் குறைந்த உணவுகளை சாப்பிடவும். அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை சாப்பிடவும்.

கொழுப்பு கல்லீரல், காய்ச்சல், நோய் தொற்று, வறட்சியான வாய் உள்ளிட்ட இன்னும் சில காரணங்களால் வாய் கசக்கும். வாய் சுகாதாரத்தை பேணுவதன் மூலமாக வாய் கசப்பை தவிர்க்கலாம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com