அரை மணி நேரம் வெயிலில் சுற்றி வந்தவுடனேயே என்னா வெயிலு மண்டைய பொளக்குது என புலம்புகிறோம். வெயில் 100 டிகிரிக்கு மேல் கொழுத்தினால் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகிறோம். வெயிலில் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி வீட்டில் ஏசியுடன் முடங்கிவிட்டோம். கார்ப்பரேட் வாழ்க்கைமுறை காரணமாக அடைப்பட்ட அலுவலகத்தில் ஏசி, வீட்டிற்குள் ஏசி இன்றி வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். உடலுக்கு தேவையான வைட்டமின் டி சூரிய வெளிச்சத்தின் மூலம் எளிதாக கிடைக்கிறது. உங்களுடைய தோலின் நிறம், வயது, வாழும் பகுதிக்கு ஏற்ப ஒவ்வொரு நபருக்கும் சூரிய வெளிச்சம் பெறுவதன் தேவை மாறுபடுகிறது.
பொதுவாக ஒரு மனிதனுக்கு தினமும் 15 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் படுவது அவசியம். கருப்பு நிற தோல் உடையவர்களுக்கு 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் தேவை. சூரியனின் புற ஊதா கதிர்கள் எலும்பு, இரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்தை வழங்குகிறது. அதே போல் சூரிய ஒளியில் இருந்து கால்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்தும் கிடைக்கும். வைட்டமின் டி தட்டுபாடு ஏற்பட்டால் எலும்புகள் வலு இழக்கும்.
இரவில் நன்றாக தூங்குவதற்கு காலையில் உங்களுடைய உடல் போதுமான சூரிய ஒளி பெற்றிருக்க வேண்டும். வயது அதிகரிக்கும் போது கண்களின் வெளிச்சத்தை எடுத்துக்கொள்ளும் திறன் குறையும். இதன் காரணமாக தூங்குவதற்கு சிரமப்படுவீர்கள்.
காலை நேரத்தில் போதிய சூரிய ஒளி பெற்றால் கொழுப்பை குறைக்கலாம். காலையில் இருந்து மதியத்திற்குள் அரை மணி நேரம் சூரிய ஒளி பெற்றால் அவற்றின் கதிர்கள் தோலுக்கு அடியில் உள்ள கொழுப்பு செல்களை சுருக்கிடும். அதிகளவு சூரிய ஒளி பெறுவது உடற்பயிற்சி செய்வதற்கு சமம்.
மேலும் படிங்க பயமுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பின் அறிகுறி, சிகிச்சை குறித்து மருத்துவரின் பிரத்யேக தகவல்
சூரிய ஒளி நம்முடைய மூளையில் செரடோனின் சுரப்பை ஊக்குவிக்கும். செரடோனின் சுரப்பு காரணமாக அமைதியாகவும், நேர்மறையாகவும் உணர்வீர்கள். மன அழுத்த பிரச்னைக்கு செரடோனின் சுரப்பு காரணமாக இருக்கலாம். சூரிய ஒளி மன நலனுக்கும் நல்லது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com