ஆயுர்வேதத்தின் படி, நல்ல செரிமானத்திற்கு எப்போது குளிக்க வேண்டும் தெரியுமா?

நல்ல செரிமானத்திற்கு எப்போது குளிக்க வேண்டும் தெரியுமா? ஆயிர்வேதம் என்ன சொல்கிறது? இதற்கான விடையை பதிவில் காண்போம்…

best time to take bath for better digestion

வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறு வயது முதலே நமக்கு நிறைய நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் குளித்த பின்னரே உணவை சாப்பிட வேண்டும் என்ற பழக்கமும் பெரியவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய வாழ்க்கை சூழலில் பெரும்பாலானவர்களும் உணவிற்கு பின்னரே குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் ஆயுர்வேதத்தின்படி குளியலும் செரிமானமும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவிற்கு முன் ஏன் குளிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

உணவிற்குப் பிறகு குளிப்பதால் அஜீரணம், உப்புசம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் இது போன்ற பிரச்சனைகள் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இது குறித்த தகவலை ஆயுர்வேத மருத்துவர் நித்திகா கோஹ்லி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

செரிமானம் எப்படி நடக்கிறது?

best time to bath for digestion

நம் உடலில் உள்ள ஐம்பூதங்களில் ஒன்றான அக்னியே செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உச்சத்தில் இருக்கும்போது உணவு சிறந்த முறையில் செரிக்கப்படுகிறது. நாம் உணவை உண்ணும்போது உடலில் இருக்கும் இந்த அக்னி புலன் வேலை செய்யத் தொடங்குகிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இது சரியான செரிமானத்திற்கு அவசியம். ஆயுர்வேதத்தின் படி, நல்ல செரிமானத்திற்கு குடலைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இந்த இரத்த ஓட்டம் சீராக இல்லாமல், செரிமான அக்னி மெதுவாக இருந்தால், செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.

குளிப்பதற்கும் செரிமானத்திற்கும் என்ன சம்பந்தம்?

digestion and bathing

ஜீரண அக்னி குளிர்ச்சியடைவதே, உடலில் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஆகும். இது பெரும்பாலும் நாம் அறியாமல் செய்யும் தவறுகளால் நிகழ்கிறது. பொதுவாக குளிக்கும்போது உடலின் துளைகள் மூடத் தொடங்குகின்றன, இதன் காரணமாக குடலைச் சுற்றி இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இக்கரணத்தினால் தான் சாப்பிடுவதற்கு முன் குளிக்க வேண்டும் என்பதை ஆயிர்வேதமும் பரிந்துரைக்கிறது. உணவு சாப்பிடுவதற்கு முன் குளித்தால் செரிமானம் நல்ல முறையில் நடக்கும். அதேசமயம் உணவிற்குப் பிறகு குளிப்பதால் செரிமான அக்னி குளிர்ச்சி அடைகிறது. இதனால் வீக்கம் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படலாம். குளியல் என்பது உடலை குளிர்விக்கும் ஒரு செயலாகும். ஆகையால் உடல் குளிர்ச்சி அடையும் பொழுது செரிமான அக்னியும் தானாகவே குறைகிறது. இதனால் உணவு சாப்பிட்ட பிறகு அவை சரியாக ஜீரணமாகாமல் போகலாம். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குளித்தால் செரிமான செயல்முறை நல்ல முறையில் நடக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற நிபுணரின் 3 நாள் டீடாக்ஸ் டயட் பிளான்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP