உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டியது அவசியம். நாம் சுவாசிக்கும் காற்று முதல் உண்ணும் உணவு வரை, எதையும் 100% சுத்தமானது என்று குறிப்பிட முடியாது. இது போன்ற பல்வேறு பொருட்களால் உடலில் நச்சுக்கள் சேர தொடங்குகின்றன.
இந்நிலையில் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற டீடாக்ஸ் உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்ளலாம். நீங்களும் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற விரும்பினால் நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த 3 நாள் டீடாக்ஸ் டயட் பிளானை பின்பற்றி பயன்பெறலாம். இது ஊட்டச்சத்து நிபுணரான ஏக்தா சூத் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு அளவில்லா நன்மைகளை அள்ளித் தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு
மூன்று நாட்களும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு எலுமிச்சையின் சாறு கலந்து குடிக்கவும்.
ஒவ்வொரு நாளும் உங்கள் காலை உணவுக்கு முன் ஏதேனும் ஒரு பருவ கால பழத்தை சாப்பிடுங்கள்.
சுரைக்காய் ஜூஸ் உடன் 1 டீஸ்பூன் சியா விதைகள் சேர்த்து குடிக்கவும்.
காய்கறி ஜூஸ் உடன் ஒரு கைப்பிடி அளவு புதினா சேர்த்து குடிக்கவும்.
இளநீர் அல்லது வெள்ளரி புதினா சாறு குடிக்கவும்.
காய்கறிகளை நிறைய சேர்த்து கிச்சடி தயார் செய்து சாப்பிடலாம். இதனுடன் வெள்ளரி(1), தக்காளி(1), கேரட் (½), வெங்காயம்(½) போன்ற காய்கறிகளையும் சாலட் ஆக செய்து சாப்பிடலாம்.
மசாலாவுடன் சேர்த்து வேகவைத்த காய்கறிகளை சாப்பிடலாம். காளான்கள், கேரட், பீன்ஸ், சுரைக்காய், பீட்ரூட், வெங்காயம், பூண்டு, கேப்சிகம் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம். இதில் குறைந்தபட்சம் 5 காய்கறிகளை பயன்படுத்த வேண்டும்.
1 கப் வேகவைத்த காய்கறிகளுடன் 1 கப் மஞ்சள் பாசி பருப்பை எடுத்துக்கொள்ளலாம்.
வெந்நீர் அருந்தி 20 நிமிடம் நடக்கவும்.
சூடான புதினா டீ
சூடான இலவங்கப்பட்டை டீ
துளசி மற்றும் இஞ்சி டீ
1 கப் பழங்கள்
வெள்ளரிக்காய் மீது வெள்ளை எள் தூவி சாப்பிடவும்
வதக்கிய காய்கறிகளுடன் 1 கப் தக்காளி துளசி சூப் சேர்த்து சாப்பிடலாம்.
கேரட் மற்றும் பீட்ரூட் சாலட் உடன் சுரைக்காய் சூப் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
1 கப் தக்காளி துளசி சூப் உடன் வேகவைத்த காய்கறிகளை சாப்பிடவும். வேகவைத்த காய்கறிகளை 1 டீஸ்பூன் எண்ணெய், குறைந்த உப்பு, ஹேர்ப்ஸ் மற்றும் பூண்டு சேர்த்து சமைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: ஹார்மோன் சமநிலைக்கு உதவும் நிபுணரின் ஒரு நாள் டயட் பிளான்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com