herzindagi
image

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவ குடிக்க வேண்டிய பானங்கள்

கல்லீரல் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க செய்யும் முக்கிய உருப்பாகும். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நச்சு நீக்கவும் மற்றும் கொழுப்பு கல்லீரல் அறிகுறிகளைக் குறைக்க உதவும் பானங்கள்
Editorial
Updated:- 2024-12-26, 23:29 IST

கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது உடலில் பல செயல்பாடுகளை செய்கிறது மற்றும் ஆரோக்கியமாக இருக்க கல்லீரல் சரியாக செயல்பட மிகவும் முக்கியம். கல்லீரல் சரியாகச் செயல்படாதபோது உடலில் நச்சுப் பொருட்கள் சேரத் தொடங்கும். இதனால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேரிடும், இந்த காலத்தில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வேகமாக அதிகரிக்க செய்கிறது. அதுபோன்ற நிலையில் கல்லீரலின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. கல்லீரல் சரியாகச் செயல்படாதபோது பல அறிகுறிகள் உடலில் தோன்றத் தொடங்கும். வாய் துர்நாற்றம், தோல் தொற்று நோய்கள், தலைவலி, நாக்கில் வெள்ளை படலம், செரிமான பிரச்சனைகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, சோர்வு, தூங்குவதில் சிரமம் மற்றும் சர்க்கரை பசி போன்றவை இதில் அடங்கும். கல்லீரல் நமது உடலுக்கு மிக முக்கிய உருப்புகளில் ஒன்றாகும். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நச்சு நீக்கவும் மற்றும் கொழுப்பு கல்லீரல் அறிகுறிகளைக் குறைக்கவும் இந்த சாற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும். இது குறித்து டயட்டீஷியன் மன்பிரீத் தகவல் அளித்து வருகிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.

 

மேலும் படிக்க: வெறுங்காலில் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகள்

கல்லீரலை பாதுகாக்க உதவும் பானங்கள்

 

  • இந்த சாறு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால். இது கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • இந்த பானத்தில் சேர்க்கப்படும் கொத்தமல்லி இலைகள் கொழுப்பு கல்லீரலின் அறிகுறிகள் வரமால் தடுக்க பயனுள்ளதாக இருக்கும்.
  • கொத்தமல்லி இலைகள் செரிமானத்தை எளிதாக்கும் சாறுகள். இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் உடலை நச்சுத்தன்மை நீக்க உதவுகிறது.
  • அடுத்தாது இதில் சேர்க்கப்படும் பீட்ரூட் உடலை நச்சு நீக்கியாக செயல்படுகிறது, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.
  • இதில் சேர்க்கும் இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தவும், வாயு பிரச்சனைக்கு தீர்வாகவும் இருக்கிறது.
  • ஏலக்காய் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
  • எலுமிச்சை இயற்கையாகவே உடலை நச்சு நீக்கி பித்த சாறு உற்பத்தியை அதிகரிக்கிறது. எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
  • சப்ஜா விதைகள் வீக்கத்தைக் குறைத்து குடல் இயக்கத்தை மேம்படுத்துகின்றன.

liver care

Image Credit: Freepik

கல்லீரல் ஆரோக்கியத்திற்கான சாறுகள்

 

கல்லீரல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமான வாழ்விற்கு உதவுகிறது. கல்லீரலை நச்சு நீக்க உதவும் பானம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

 

  • கொத்தமல்லி இலை - கைப்பிடி
  • பீட்ரூட் - பாதி துண்டு
  • இஞ்சி - அரை அங்குலம்
  • ஏலக்காய் - 2
  • எலுமிச்சை - பாதி
  • தண்ணீர் - 1 கிளாஸ்
  • சப்ஜா விதைகள் - 1 டீஸ்பூன் ஊறவைத்தது

coriander leaf social image

 Image Credit: Freepik


செய்முறை

 

எலுமிச்சை மற்றும் சப்ஜா விதைகள் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு ஜாடியில் சேர்த்து நன்கு கலக்கவும்.
அதை வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் சப்ஜா விதைகள் சேர்த்து குடிக்கவும்.

 

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் கொழுப்பு கல்லீரல் அறிகுறிகளைக் குறைக்கவும், நிபுணர்கள் பரிந்துரைக்கும் சாறுகளை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றவும். உங்களுக்கு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சனை இருந்தால் மருத்துவரை ஆலோசனைக்கு பின் குடிப்பது நல்லது.

 

மேலும் படிக்க: உலர் திராட்சையை ஊற வைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com