பழங்காலத்தில் ஆரோக்கியத்திற்கு நன்மைகள் தர பருகக்கூடிய திராட்சை நீர், சில நாட்களாக ஆரோக்கிய வட்டாரங்களில் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலர் திராட்சையை இரவில் ஊறவைத்து காலையில் தண்ணீர் குடித்து வந்தால் உடல் உறுப்புகளுக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.
மேலும் படிக்க: 30 வயதுக்கு மேல் பெண்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் கருப்பு எள்ளுவில் இருக்கும் சத்துக்கள்
திராட்சை தண்ணீரின் ஆரோக்கிய நன்மைகள் இங்கே:
திராட்சை நீர் ஒரு சிறந்த இயற்கை நச்சு நீக்கியாக இருக்கிறது. திராட்சைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. கல்லீரலை சுத்தப்படுத்தவும், திறம்பட கல்லீரலை செயல்பட உதவுகிறது, உங்கள் உடலை நச்சு நீக்க விரும்பினால் வெறும் வயிற்றில் திராட்சை நீரைக் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நச்சு நீக்கம் செயல்முறை சிறந்த செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.
Image Credit: Freepik
திராட்சைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது. திராட்சையில் இருக்கும் சத்துக்களை அனைத்தும் ஊறவைத்த தண்ணீரில் உறிஞ்சுவதால், இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் உணவு ஜீரணிக்க எளிதாக்குகிறது. திராட்சை தண்ணீரை வழக்கமாக உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் இயக்கங்களை மேம்படுத்தவும், ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஆதரிக்கவும் உதவும்.
திராட்சை நீர் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பொட்டாசியம் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் இருக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும், உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்கவும் தினமும் திராட்சை நீரைக் குடிப்பதை நல்லது.
Image Credit: Freepik
திராட்சை தண்ணீர் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க இந்த ஊட்டச்சத்துக்கள் அவசியம். உலர்ந்த திராட்சை நீர், இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
Image Credit: Freepik
திராட்சை நீர் ஒரு சிறந்த ஆற்றல் ஊக்குவிக்கியாக இருக்கிறது. திராட்சையில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் உள்ளதால் விரைவான ஆற்றலை அதிகரிக்கும். நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் வைத்திருக்கும் ஆற்றலுடன் உங்கள் நாளைத் தொடங்குவதற்கு காலையில் திராட்சை நீரைக் குடிப்பது நல்லது.
சிறந்த முடிவுகளுக்கு, குறைந்தது நான்கு வாரங்களுக்கு தொடர்ந்து உட்கொள்வது நல்லது. திராட்சை நீர் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கையான, செலவு குறைந்த வழியாகும். அதிகபட்ச நன்மைகளைப் பெற தினசரி வழக்கத்தில் இணைக்கவும்.
மேலும் படிக்க: 30 நாட்களில் 10 கிலோ எடையை அசால்டாக குறைக்கலாம்.. இந்த டயட்டை கண்டிப்பா பாலோ பண்ணிப் பாருங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com