நம் வீடுகளில் எப்போதும் இருக்கக்கூடிய உணவு பொருட்களின் பால் மற்றும் நெய்யும் அடங்கும். பால் மற்றும் நெய்யின் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இன்றைய பதிவில் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் நெய் கலந்த பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான மாயா பெரோரா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
நிபுணரின் கருத்துப்படி பாலில் உள்ள டிரிப்டோபான் எனும் அமினோ அமலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. இந்த டிரிப்டோபான் மாற்றப்படும்போது மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் ஹார்மோனான செரோடோனின் உற்பத்தி செய்யப்படுகிறது. செரோடோனின் நல்ல தூக்கத்தை பெற உதவும் ஹார்மோனான மெலடோனின் அளவை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: இரட்டிப்பு பலன்களை அள்ளி தரும் நெல்லி கற்றாழை ஜூஸ்!
மேலும், நிபுணர் கூறியதாவது பாலில் காணப்படும் மெலடோனின் எனும் ஹார்மோன், தூக்கம் மற்றும் விழித்திருக்கும் சுழற்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பாலில் காணப்படும் சில புரதங்கள் கவலை மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும், நல்ல தூக்கத்தை பெறவும் உதவுகின்றன.
ஆயுர்வேத சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் சுத்தமான நெய்யில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. நெய் மூட்டு விறைப்புத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. நெய்யில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருமலை குணப்படுத்த உதவுகின்றன மற்றும் ஃப்ரீ ரேடிகல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கின்றன.
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான நெய்யில் வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஒன்று பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
பாலில் நெய் கலந்து குடிப்பதால் செரிமானம் மேம்படும், ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கும் மற்றும் தூக்கம் விழிப்பு சுழற்சி சீராக நடைபெறும். இதனுடன் நல்ல பளபளப்பான சருமத்தையும் பெறலாம்.
பால் மற்றும் நெய், இவ்விரண்டும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் உங்களுடைய உணவு முறையில் இந்த கலவையை சேர்த்துக் கொள்வதற்கு முன் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெறவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 5 அற்புத உணவுகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com