காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்? நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புகளின் அளவுகளை கண்காணிப்பது இல்லையா? உங்களுடைய 20களில், இதுபோன்று சிறு சிறு விஷயங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால் 30 வயதை கடந்து விட்டால் இதுபோன்ற சிறு விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
30 வயதிற்குப் பிறகு உடல் அளவிலும், மனதளவிலும், குடும்பத்திலும் பல விதமான மாற்றங்கள் ஏற்படலாம். வேலை, குடும்பம், ஆரோக்கியம் என எல்லாவற்றிலும் புதிய மாற்றங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக 30 வயதிற்கு பிறகு உடல் எடை கணிசமாக உயரலாம். இந்த காலகட்டத்தில் வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், சருமத்தை பராமரிக்கவும் மற்றும் தொப்பையை குறைக்கவும் சற்று கடினமாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மேல் உடலை வசீகரமாக மாற்றும் ABS பயிற்சிகள்!
பெரும்பாலான பெண்கள் உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. இந்நிலையில் 30 வயதிற்கு பிறகு உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் உங்களுடைய வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர சுருக்கங்கள் நீங்கி, நல்ல இளமையான சருமத்தையும் பெறலாம். இந்த உணவுகள் குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான பிரீத்தி தியாகி அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இனிப்பு சுவை நிறைந்த பெர்ரி வகைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், நார்ச்சத்துக்களும், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதை தயிர் அல்லது ஸ்மூத்தியுடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது காலை உணவுடன் அப்படியே சாப்பிடலாம்.
மீனில் புரதமும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இவை இதய நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன. நெத்திலி, சூரை, காலா, மத்தி போன்ற மீன் வகைகளை வாரத்திற்கு 1-2 முறை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.
அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் வைட்டமின் A, C மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு நார்ச்சத்துக்களும் காணப்படுகின்றன. கீரைகளை கடைந்து சாப்பிடலாம் அல்லது ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து சாலட் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் தயாரிக்கும் சூப் அல்லது குழம்பு வகைகளிலும் கீரைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளில் தாவர அடிப்படையிலான புரதங்கள் நிறைந்துள்ளன. இதில் காணப்படும் நல்ல கொழுப்புகள் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கின்றன. ஒரு கைப்பிடி அளவு நட்ஸை ஓட்ஸ் அல்லது தயிருடன் கலந்த ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் தினமும் ஒரு கைப்பிடி அளவு மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது.
ஆலிவ் ஆயிலில் வைட்டமின் E, பாலிஃபீனால்கள், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் யாவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. நீங்கள் சமைக்கும் உணவுகளில் வெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 உணவு வகைகளையும் உங்களுடைய தினசரி உணவு முறையில் சேர்த்து வர, முப்பது வயதை கடந்தாலும் இளமையாகவும் ஃபிட்டாகவும் இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: 40 வயதிலும் இளமையாக இருக்கலாம், கொலாஜன் நிறைந்து இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com