
நெய் என்பது உணவு பொருள் மட்டுமல்ல. அது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதம் ஆகும். குறிப்பாக, நம்முடைய சருமத்தை சீராக பராமரிப்பதில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஒரு ஸ்பூன் நெய் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஏராளமான பயன்களை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை பார்ப்போம்.
இளமையான சருமத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அன்டி-ஏஜிங் கிரீம்களுக்காக நாம் செலவு செய்கிறோம். ஆனால், நெய் இயற்கையாகவே உங்கள் சருமத்தில் கொலஜன் (Collagen) உற்பத்தியை தூண்டுகிறது. இதில் உள்ள அன்டிஆக்சிடென்ட்ஸ், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. காலப்போக்கில் உங்கள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது. தினசரி நெய் உட்கொள்வது, எந்த செயற்கை பொருட்களும் இல்லாமல் உங்கள் சருமத்தை இளமையாகவும், உறுதியாகவும், புதுப்பொலிவுடனும் வைத்திருக்கும்.

நெய், இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் இயற்கையான நிறத்தை மேம்படுத்தி, எப்போதும் பொலிவாக காட்சியளிக்க இது உதவுகிறது. இதன் மூலம் மேக்கப் தேவையில்லாத ஒரு பொலிவை நீங்கள் பெறலாம்.
அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, நாம் அனைவரும் அவ்வப்போது சருமத்தில் தீவிரமான அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. நெய்யின் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) தன்மை காரணமாக, இது உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு (Sensitive Skin) மிகவும் உகந்தது. உங்களுக்கு சூரிய வெப்பத்தால் ஏற்படும் எரிச்சலாக இருந்தாலும் சரி, மாசுபாட்டால் ஏற்படும் அரிப்பாக இருந்தாலும் சரி, நெய் உங்கள் சருமத்தை குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது. இதன் மூலம் நீங்கள் மென்மையான மற்றும் தெளிவான சருமத்தை பெறலாம்.
மேலும் படிக்க: Benefits of aloe vera gel: கற்றாழை பயன்படுத்துவதால் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
நீங்கள் வறண்ட சருமத்தால் அவதிப்பட்டால், உங்களுக்கு தேவையானது நெய் தான். இது சரும அடுக்குகளின் ஆழத்தில் ஊடுருவி, உள்ளிருந்து புத்துணர்ச்சி அளிக்கிறது. இது ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாக (Moisturiser) செயல்படுகிறது. உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், தெளிவாகவும் வைத்திருக்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் இது ஒரு வரப்பிரசாதம்.

உறங்கச் செல்லும் முன் சிறிது நெய்யை எடுத்து, முகத்தில் வட்ட வடிவ அசைவுகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்தால் காலையில் உங்கள் முகம் மென்மையாக இருக்கும். இது தவிர நெய் மற்றும் மஞ்சளை கலந்து ஃபேஸ் மாஸ்க் செய்யலாம். இதை முகத்தில் தடவி விட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
இவ்வாறு நெய்யை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய சருமத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com