herzindagi
Surprising Green Chilli Water Benefits for Health

Drinking Chilli Water: ஊறவைத்த பச்சை மிளகாய் தண்ணீரை குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்

பச்சை மிளகாய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், பச்சை மிளகாயை ஊறவைத்து அதன் தண்ணீரை குடித்தால், எண்ணற்ற பலன்கள் எப்படி கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Editorial
Updated:- 2024-07-02, 15:29 IST

பச்சை மிளகாய் நம் அனைவரின் வீடுகளிலும் கண்டிப்பாக பயன்படுத்தப்படுகிறது. உணவின் ருசியை அதிகரிக்க அல்லது கூடுதல் காரம் விரும்பி சாப்பிடுவதற்கும் கிட்டத்தட்ட அனைவருக்கும் பச்சை மிளகாய் பிடிக்கும். உணவில் காரத்தை சேர்க்கும் பச்சை மிளகாய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, இரும்பு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. பச்சை மிளகாயை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அதை தண்ணீரில் ஊறவைத்து சில மணி நேரம் விட்டு அதன் நீரை குடித்தால் அது உங்கள் ஆரோக்கியத்தில் எவ்வளவு நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?.  பச்சை மிளகாயை ஒரு வாரம் ஊறவைத்து அதன் தண்ணீரை குடித்து வந்தால் அது உங்கள் ஆரோக்கியத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். இது குறித்து டயட்டீஷியன் நந்தினி தகவல் அளித்துள்ளார். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்.

மேலும் படிக்க: அறியப்படாத ஆரோக்கிய நன்மைகளை ஒளித்து வைத்திருக்கும் மாதுளை இலைகள்

பச்சை மிளகாயை ஊறவைத்து தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

soaked chilli inside

  • பச்சை மிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது மற்றும் பல வகையான தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • பச்சை மிளகாய் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மனித உடலுக்கு உதவுகிறது. அவை புரோஸ்டேட் பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகின்றன. புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
  • பச்சை மிளகாய் நீர் தோல் மற்றும் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
  • இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் தண்ணீரைக் குடிப்பது மிகவும் நல்லது.
  • பச்சை மிளகாய் நீர் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
  • இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த நீர் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

பச்சை மிளகாய் தண்ணீர் தயாரிக்கும் முறை

soaked chilli new inside 

  • இரவில் தூங்கும் முன் 3-4 பச்சை மிளகாயை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது மிளகாயை மையத்திலிருந்து ஒரு கீரல் போட வேண்டும்.
  • இந்த மிளகாயை குறைந்தது 1 கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • இந்த தண்ணீரை காலையில் குடிக்கவும்.
  • குடிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு நீங்கள் எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது.

மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ராகியில் இருக்கு முழு நன்மைகளை பற்றி பார்க்கலாம்

குறிப்பு- உங்களுக்கு மிளகாய் ஒவ்வாமை இருந்தாலோ அல்லது ஏதேனும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அதை உட்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

பச்சை மிளகாய் நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Her zindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com