பெரும்பாலும் எல்லோருடைய சமையலறையிலும் பிரியாணி இலைகளை வைத்திருப்போம். இந்த நறுமணமிக்க இலைகளை பொடியாகவோ அல்லது முழு இலைகளாகவோ சமையலுக்கு பயன்படுத்தலாம். இது பிரியாணி, புலாவ் குருமா போன்ற உணவுகளுக்கு தனித்துவமான சுவையை வழங்குகிறது.
உணவுகளுக்கு சுவையூட்டும் இந்த பிரியாணி இலைகளில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. இதைப் பற்றிய முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
உணவில் பிரியாணி இலைகளை சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இரைப்பை-குடல் மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, இரைப்பை சேதத்தைத் தடுக்கிறது. மேலும் அங்குள்ள அமைப்பில் நச்சுத்தன்மையையும் குறைக்கிறது.
பிரியாணி இலையில் உள்ள சேர்மங்கள் வயிற்று பிரச்சனைகளை தீர்க்கவும், மலக்குடல் எரிச்சல் நோயை தணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
பிரியாணி இலைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கின்றன. புண் மற்றும் புற்றுநோய்க்கு காரணமான H pylori எனும் பாக்டீரியாவை எதிர்த்து போராடுவதற்கான சத்துக்கள் பிரியாணி இலையில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த அரைத்த பிரியாணி இலை காப்ஸ்யூல்களை பயன்படுத்தலாம் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இதை உறுதிப்படுத்துவதற்காக மேலும் சில ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.
பிரியாணி இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது காயமடைந்த பகுதிகளில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்க உதவுகிறது. காயங்களினால் ஏற்படும் நோய் தொற்றை தவிர்க்கவும், கொப்புளங்களை சரி செய்யவும் சருமத்திற்கு பிரியாணி இலையின் எண்ணெயை பயன்படுத்தலாம்.
பிரியாணி இலைகள் சிறுநீரகக் கற்களை தடுக்க உதவுகின்றன. இது உடலில் உள்ள யூரியாவின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதாக ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதை உறுதிப்படுத்த மேலும் சில ஆய்வுகளும் தேவைப்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: இந்த பிரச்சினை உள்ளவர்கள் உணவில் புளியை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com