நாட்டு பீன்ஸில் தொடங்கி பிரெஞ்ச் பீன்ஸ் வரை, நூற்றுக்கும் மேற்பட்ட பீன்ஸ் வகைகள் உள்ளன. பீன்ஸ் வைட்டமின் A, C மற்றும் K சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். மிக மலிவான விலையில், எளிதாகக் கிடைக்கக்கூடிய இந்த காய்கறியை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள நன்மைகளை முழுமையாக படித்த பிறகு, பீன்ஸ் பற்றிய கண்ணோட்டம் நிச்சயமாக மாறும்.
நார்ச்சத்துக்கள் நிறைந்த பீன்ஸ் செரிமான மண்டலத்தை சீராக வைத்துக் கொள்ளவும், குடல் பாதையின் அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. பீன்ஸை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் எலும்புகளை வலுப்படுத்துவது வரை பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் படித்தறியலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இரவு பாலில் நெய் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
பீன்ஸில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது பெண்ணினுடைய கருவுறுதல் திறனை மேம்படுத்த உதவுகிறது. கர்ப்பம் தரிக்க முயற்சி செய்யும் பெண்கள் இரும்பு சத்துக்கள் நிறைந்த பீன்ஸை தங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த பீன்ஸை வைட்டமின் C நிறைந்த காய்கறிகளான குடைமிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். ஆற்றல் பற்றாக்குறை, பலவீனமான வளர்ச்சிதை மாற்றம் மற்றும் இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பீன்ஸ் மிகவும் நல்லது.
பீன்ஸில் குறிப்பிடத்தக்க அளவு குளோரோஃபில் உள்ளது. பொதுவாக இறைச்சிகளை அதிக வெப்பநிலையில் கிரில் செய்யும் பொழுது ஹீட்டோரோசைக்ளிக் அமீன்கள் வெளியிடப்படும். இதனால் ஏற்படும் புற்றுநோயின் விளைவுகளை குறைக்க கிரில் செய்யப்பட்ட உணவுகளுடன் பீன்ஸையும் எடுத்துக்கொள்ளலாம். இது பெருங்குடல் புற்று நோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. பெருங்குடலில் உண்டாகும் பாலிப்கள் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. பீன்ஸ் சாப்பிடுவது இது போன்ற பாலிப்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
பீன்ஸில் உள்ள ஃபோலேட் மனச்சோர்வின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. உடலில் சரியான அளவு ஃபோலேட் இருந்தால், உடலில் ஹோமோசிஸ்டீன் அதிகரிப்பதை தடுக்கலாம்.
இது மூளைக்கு செல்லும் இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்களை தடுக்கலாம். இதனால் நமது மனநிலை, தூக்கம் மற்றும் பசியை கட்டுப்படுத்தும் இரண்டு முக்கிய ஹார்மோன்களான டோபமைன் மற்றும் நோர்பைன்ஃப்ரின் பாதிக்கப்படுகின்றன.
உடலில் வைட்டமின் K சத்துக்கள் குறைவாக இருக்கும் பொழுது, எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இந்நிலையில் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், கால்சியம் சத்துக்களின் உறிஞ்சுதலை மேம்படுத்தவும் பீன்ஸை உங்களுடைய தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்ளவும். இதில் நிறைந்துள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு தேய்மானம் போன்ற எலும்பு சார்ந்த நோய்களை தடுக்கின்றன.
பீன்ஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதன் மூலம் ஃபிரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்க ஈஸியான வழி, இளநீர் குடியுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com