ஒரு டம்ளர் பார்லி தண்ணீர் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தூக்கி நிறுத்தும்

பார்லி தண்ணீர் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோய் எதிர்த்து போராட உடலை தயார்ப்படுத்தி நன்மை பயக்கும். பார்லி தண்ணீர் குடிப்பத் ஊடல் எடை இழப்பு, செல்களின் வளர்ச்சி, உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுதல் என எண்ணற்ற பயன்களை அளிக்கும்.
image
image

பார்லி - அரிசி, கோதுமை போல பல நாடுகளின் உணவுமுறையில் உள்ள தானியம் ஆகும். கடந்த சில வருடங்களாக உலகளவில் பார்லி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் பார்லி தண்ணீர் அபரிமிதமான நன்மைகளை கொண்டது. குளிர்ந்த நீரில் பார்லியை கழுவி ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை தோலுடன் சேர்த்து 6 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிட்டு 30 நிமிடங்களுக்கு ஆறவிடவும். இரண்டு ஸ்பூன் தேன் அல்லது பவுடர் வெல்லம் சேர்த்து வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதை குளிர்ச்சியாக குடிப்பதே நல்லது. வாரத்திற்கு இரண்டு முறை குடித்து பாருங்கள். கீழ்காணும் நன்மைகளை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். இதை பார்லி கஞ்சி என்றும் சொல்கின்றனர்.

how to make barley water

பார்லி தண்ணீர் நன்மைகள்

அதிக நார்ச்சத்து

பார்லி தண்ணீரில் உடலுக்கு ஆற்றலை வழங்கும் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கிறது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது பல குடல் சார்ந்த நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

சிறுநீர் பாதை தொற்றுக்கு தீர்வு

பார்லி தண்ணீர் மருத்துவ் ஆராய்ச்சிகளின்படி சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் டையூரிடிக் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது. பார்லி தண்ணீர் சிறுநீர் பாதை தொற்று பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு தீர்வளிக்கிறது.

கொழுப்பு அளவு கட்டுப்பாடு

பார்லி தண்ணீரில் பல வேதியியல் சேர்மங்கள் உள்ளன. அவை LDL எனும் கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கூடுதலாக, பார்லி தண்ணீர் நல்ல கொழுப்பின் அளவைப் சீராக வைத்திருக்கிறது.

இரத்த அழுத்தம் தவிர்ப்பு

பார்லி தண்ணீரில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலில் சோடியம் அளவை சமநிலைப்படுத்துகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இரத்த அழுத்த பிரச்னை தவிர்க்கப்படுகிறது.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு

பார்லி தண்ணீரில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சுமார் 11-14 மணி நேரத்தில் குறைக்கிறது. இனிப்பு சேர்க்காத பார்லி தண்ணீர் குடித்தால் கூடுதல் பலன் பெறலாம். பார்லி தண்ணீரில் உள்ள நார்ச்சத்து, உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்து பசியின்மைக்கு வழிவகுக்கும்.

செரிமான அமைப்புக்கு உதவி

பார்லியில் கரையக்கூடிய செரிமான நார்ச்சத்து அதிகமாக உள்ளது. வாயு போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பார்லி தண்ணீர் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கிறது.

இது புற்றுநோய் செல்களின் பரவலை தடுக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிங்கசுரைக்காய் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்தால் நல்ல ஆரோக்கியத்துடன் நோய் இன்றி வாழலாம்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP