ஊறவைத்த ஆல்பக்கோடா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் வியக்கவைக்கும் நன்மைகள்

இரவு முழுவதும் ஊற வைத்த ஆல்பக்கோடா பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்...

prunes health benefits

ஆல்பக்கோடாவை உலர்ந்த பிளம்ஸ் என்றும் சொல்லலாம். இதில் வைட்டமின்கள், பொட்டாசியம், ரெடீனால் மற்றும் இரும்பு சத்து ஆகிய தாது ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கின்றன. ஆல்பக்கோடாவில் ஒளிந்திருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நம் தோல் மற்றும் கூந்தலை நல்ல ஊட்டத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்ள உதவுகிறது.

மேலும் இது நமக்கு ஏற்படும் வயது முதிர்ச்சியை தாமதம் சுருக்கங்கள் உருவாவதை தாமதம் ஆக்குகிறது. ஆல்பக்கோடாக்கு ஆன்டி இன்பிளமேட்டரி தன்மை உள்ளது, ஆர்த்தரிடிஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஹெல்த் ஹாட்ஜ் எனப்படும் ஊட்டச்சத்து நிறுவனத்தின் நிபுணர் மற்றும் சக நிறுவனருமான பாலக் கரோடியா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

prunes amazing benefits

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

2010ல் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 259 பேரை தேர்வு செய்து அவர்களுக்குள் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களை மூன்று குழுக்களாக பிரித்தனர். அதில் 2 குழுக்களுக்கு ஆல்பக்கோடா மற்றும் அதன் சாறு வெறும் வயிற்றில் கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழுவிற்கு மட்டும் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. 8 வாரம் இதை பின்பற்றிய பிறகு, ஆல்பக்கோடா மற்றும் சாறு குடித்த குழுவினரின் ரத்த அழுத்தம் குறிப்பிட்ட அளவுக்கு குறைந்து விட்டது. சாதாரண தண்ணீர் குடித்த குழுவிற்கு பெரிய அளவுக்கு ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

இதயத்தை பாதுகாக்கிறது

பொட்டாசியம் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது நமது இதயம் சரியான முறையில் செயல்படவும், உடலின் நரம்பு செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்க ஊக்குவிக்கிறது. மயக்கம், இதய வியாதிகள், மாரடைப்பு மற்றும் நெஞ்சு வலி போன்ற அபாயகரமான பிரச்சனைகள் குறைகிறது.

செரிமான மண்டலத்தை சீராக இயக்குகிறது

ஆல்பக்கோடாவில் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கிறது. இது செரிமான மண்டலத்தை சீராக இயக்க பெரும் உதவி புரிகிறது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் இன்சுலின் பக்கம் நம் உடலின் உணர்திறனை அதிகப்படுத்துகிறது. எனவே இது 2 ஆம் வகையான நீரிழிவு நோய் சிகிச்சைக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. மேலும் கரையும் நார்ச்சத்து நாம் அதிகப்படியாக உண்பதை தவிர்க்கிறது மற்றும் நமது உடல் எடையை ஒரே அளவில் வைத்து கொள்கிறது அல்லது எடையை குறைக்கிறது. ஆல்பக்கோடாவில் மலச்சிக்கல் ஏற்படாத படி உணவை நல்லபடியாக செரிமானம் ஆக வைக்கிறது மற்றும் குடல் அசைவை முறையாக ஊக்குவிக்கிறது.

வைட்டமின் C நிறைந்தது

நம் எலும்புகள், தசைகள், இரத்த நாளங்கள் மற்றும் பற்கள் பலமாக வைட்டமின் C சத்து உடலுக்கு தேவை படுகிறது. இதனால் உடல் இரும்பு சத்தை நன்றாக உறிஞ்சி விடுகிறது. வைட்டமின் C சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் கொலாஜன் பலமடைய உதவுகிறது. நம் உடல் திசுக்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்க கொலாஜன் அவசியம்.

இதுவும் உதவலாம் :தினமும் ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும்?

prunes uses in tamil

எலும்புகளை பலமாக்குவதில் அற்புதம் செய்கிறது

ஆல்பக்கோடாவில் எக்கச்சக்கமான அளவுக்கு ஃபீனாலிக் மற்றும் ஃபிளேவனாயிட் கலவைகள் உள்ளன. இவை எலும்பு தேய்மானம் மிக மெதுவாக நடக்க மட்டும் துணை புரிய வில்லை, ஆனால் சில விதமான எலும்பு திடத்தை குறைக்கும் நோய்களை கூட தலை கீழாக மாற்றுகிறது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP