உணவிற்கு புளிப்பு சுவையை கொடுக்கும் புளியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குழம்பு தொடங்கி பானம் வரை புளியை வைத்து ஏராளமான உணவுகளை சமைக்க முடியும். ஆனால் புளியின் கொட்டை மற்றும் இலைகள் உண்ணக்கூடியவை என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை.
அதிலும் புளியங்கொட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. முந்தைய காலத்தில் மலேரியா மற்றும் இரத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கான மருந்துகளிலும் புளியங்கொட்டை பயன்படுத்தப்பட்டது. புளியங்கொட்டையை நம் அன்றாட பயன்பாட்டிற்கு கொண்டு வருவது மூலம் பின்வரும் நன்மைகளை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பொடித்த வெல்லத்துடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்களை பெறலாம்!
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டு உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பல உடல்நலம், சருமம் மற்றும் கூந்தல் சார்ந்த பிரச்சினைகளை தடுக்கலாம். முகப்பரு மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராட புளியங்கொட்டையை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கறை படிந்த பற்களால் தோற்றம் பாதிக்கப்படலாம். பற்களை முறையாக சுத்தம் செய்ய தவறுவதாலும் அல்லது சில நேரங்களில் படிந்துள்ள உணவு பொருட்களாலும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றன. இந்நிலையில் உங்கள் பற்களை வலுவாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள புளியங்கொட்டை பொடியை கொண்டு பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்யலாம். பல் துலக்க புளியங்கொட்டை பொடியை பயன்படுத்தும் பொழுது பற்கள் சுத்தமாகும். மேலும், பற்களில் படிந்துள்ள கறைகளையும் கணிசமாக குறைக்கலாம்.
அதிக திரை நேரம் மற்றும் மோசமான உணவுப் பழக்க வழக்கங்களால் கண்கள் பலவீனமடைகின்றன. இந்நிலையில் கண்களை மேலும் சேதமடையாமல் பாதுகாக்க இடைவெளிகள் எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் கண்களின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள புளியின் கொட்டையின் சாறை பயன்படுத்தலாம் இதை ஆயுர்வேத நிபுணரின் வழிகாட்டுதலுடன் பின்பற்றவும்.
ஒரு சில சமயங்களில் காரமான உணவு அல்லது பழைய உணவுகளை சாப்பிடும் பொழுது வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. புளியங்கொட்டையின் சிவப்பு வெளிப்புற தோல் வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவும். புளியங்கொட்டையை இரவு முழுவதும் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளலாம். இதை நேரடியாகவோ அல்லது தண்ணீருடனோ சேர்த்து எடுத்துக் கொள்ளும் பொழுது வயிறு சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் புளியங்கொட்டையின் சாறை சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். இது தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும். நீங்கள் விரும்பினால் இந்த தண்ணீரில் இஞ்சி, இலவங்கப்பட்டை போன்ற பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இது சளி, இருமல் மற்றும் தொண்டை வலிக்கு நன்மை தரும்.
இந்த பதிவும் உதவலாம்: உணவில் உளுந்து சேர்த்துக்கோங்க, உடல் பலத்துடன் ஆரோக்கியமாக வாழலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source: freepik & shutterstock
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com