வெல்லம் நன்மைகள் : ஊட்டச்சத்து நிபுணரின் கருத்துப்படி நம் சமையலறையில் இருக்கக்கூடிய வெல்லத்தை கொண்டு பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். இது செரிமானத்தை மேம்படுத்தவும், கருவுறுதல் தீரன் மற்றும் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
போதுமானவரை வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பொடித்த வெல்லத்தை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இதில் உள்ள வைட்டமின்களும், தாதுக்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் உடலின் வெப்பநிலையை பராமரிப்பது வரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் இரத்த சோகையிலிருந்தும் விடுபட உதவுகின்றன. இதனுடன் வெல்லம் சாப்பிடுவது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றம் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாமா?
வெல்லத்தின் நன்மைகளை இருமடங்காக உயர்த்த வேண்டுமா? இதற்கு பொடித்த வெல்லத்துடன் ஒரு சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட வேண்டும். இந்தக் கலவைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன. வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டிய உணவுகளை உணவியல் நிபுணரான ருஜுதா திவாகர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற பொடித்த வெல்லத்தை நெய்யுடன் கலந்து சாப்பிடலாம். வெல்லத்தில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், செலினியம், மாங்கனீஸ், துத்தநாகம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளன. அதேசமயம் நெய்யில் பல வைட்டமின்களும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை இரண்டும் சேரும் பொழுது உடலுக்கு அதிகபட்ச நன்மைகளைத் தருகின்றன.
இந்த கலவையானது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் வலியை குறைக்க உதவுகின்றன.
சளி, இருமல் போன்ற பருவ கால பிரச்சனைகளை தவிர்க்க பொடித்த வெல்லத்துடன் எள் கலந்து சாப்பிடலாம்.
வாய் துர்நாற்றம் மற்றும் பற்களில் படிந்துள்ள கரையை நீக்க பொடித்த வெல்லத்துடன் சோம்பு கலந்து சாப்பிடலாம்.
வெல்லம் மற்றும் வெந்தயம் கலவை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இளநரையை தடுக்கவும், நல்ல ஆரோக்கியமான பளபளப்பான கூந்தலை பெறவும் வெந்தயத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
இவை எலும்புகளின் அடர்த்தி மற்றும் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த உதவுகின்றன.
இவை இரும்புச்சத்து குறைபாட்டை போக்க உதவுகின்றன. இதனுடன் நல்ல ஆரோக்கியமான சருமத்தையும் கூந்தலையும் பெறலாம்.
பொடித்த வெல்லத்துடன் வேர்க்கடலையை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனுடன் பசியையும் கட்டுப்படுத்தலாம்.
வெல்லத்தை மஞ்சளுடன் கலந்து சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வீக்கத்தை குறைக்கவும், காய்ச்சலுக்குப் பிறகு விரைவில் மீண்டு வரவும் வெல்லத்துடன் சுக்கு பொடியை கலந்து சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நடைப்பயிற்சியை இப்படி சரியாக செய்தால் எடை தானாக குறையும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com