வலி நிறைந்த சிறுநீரக கல் பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த கற்கள் சோடியம் மற்றும் தாதுக்கள் குவிவதால் உருவாகிறது. சிறுநீரக கற்களின் அளவு நபருக்கு நபர் மாறுபடும். சிறிய அளவிலான சிறுநீரக கற்களை மருந்துகள் மற்றும் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நீக்கலாம். ஆனால் பெரிய கற்கள் உருவாகும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டிய சூழல் உருவாகலாம்…
சிறுநீரக கற்கள் உருவான பிறகு சிகிச்சை மேற்கொள்வதை விட, வருமுன் காப்பதே சிறந்தது! நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு சில நல்ல பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கலாம். இதற்கு உதவக்கூடிய சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை இன்றைய பதிவில் படித்தறிந்து பயன்பெறுங்கள்…
இந்த பதிவும் உதவலாம்: சீக்கிரமே தாயாகலாம்! இயற்கையாக கருத்தரிக்க இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க
உணவில் கூடுதலாக உப்பு சேர்த்து சாப்பிடுவது சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. சிறுநீரில் உள்ள அதிகப்படியான உப்பு கால்சியம் உறிஞ்சுதலை தடுக்கிறது. இது சிறுநீரில் உள்ள கால்சியம் சத்துக்கள் மீண்டும் இரத்தத்தில் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. சிறுநீரில் உள்ள அதிகப்படியான கால்சியம் சிறுநீரகக் கற்களுக்கு வழிவகுக்கும். இதை தடுக்க உணவில் சரியான அளவு உப்பு பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
சில சிறுநீரக கற்கள் ஆக்சலேட்டால் ஆனவை. ஆக்சலேட் எனும் கலவை நாம் உண்ணும் உணவில் காணப்படும் ஒரு இயற்கையான கலவை ஆகும். இந்த ஆக்சலேட் சிறுநீரில் உள்ள கால்சியத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன. சிறுநீரகக் கற்களை தடுக்க கீரைகள், காபி, வேர்க்கடலை, சாக்லேட், தக்காளி போன்ற உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் சிறுநீரக கல் உருவாவதையும் தடுக்க முடியும்.
முட்டை, மட்டன், சிக்கன், மீன் போன்ற அசைவு உணவுகளை வாரத்திற்கு 1-2 முறை எடுத்துக் கொள்வது நல்லது. தொடர்ந்து அசைவ அல்லது அதிகப்படியான அசைவ உணவுகளை சாப்பிடுவது சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும். அசைவ உணவை தவிர்த்து விட்டு முற்றிலுமாக சைவ உணவு சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருப்பினும் அசைவ உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.
சிறுநீரகக் கற்களை தடுக்க ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை குறைக்கலாம். ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தண்ணீரை தவிர எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் இளநீர் போன்ற திரவங்களையும் எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள பண்புகள் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: பிடிவாதமான தொப்பையை குறைக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com