வீட்டில் செடிகள் வளர்ப்பது அல்லது தோட்டம் வைத்து பராமரிப்பது மனதிற்கு இன்றியமையாத மகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டு வாசலில், மாடியில் செடிகள் வளர்க்கிறோம். ஏனெனில் சிறிய சிறிய செடிகள் வளர்ப்பதற்கு பெரிதளவு இடம் தேவைப்படாது. இரசாயன கலப்பு இன்றி இயற்கையான காய்கறிகளை சாப்பிடுவதற்கு மாடி தோட்டத்தில் செடி வளர்ப்பு சிறந்தது. காய்கறி செடி நன்றாக வளர்வதற்கும், பூச்சி தாக்குதலால் பாதிப்படையாமல் இருப்பதற்கும் இயற்கை உரம் மற்றும் இரசாயனம் பயன்படுத்துகிறோம். இவற்றை பயன்படுத்திய பிறகும் நாம் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. வளர்ச்சியையும், விளைச்சலையும் அதிகரிக்க பலரும் நர்சரியில் கிடைக்கும் பொருட்களை செடி மீது பயன்படுத்துகின்றனர். எல்லாமுறையும் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு டம்ளர் மோர் இந்த பிரச்னைகளை தீர்த்திடும். செடிகளின் வளர்ச்சிக்கு மோர் பயன்படுத்துவது எப்படி என பார்க்கலாம்.
காய்கறி செடி மீது மோர் ஊற்றினால் அதில் உள்ள லாக்டிக் அமிலம் செடிகளில் கருப்பு நிற புள்ளிகள் வருவதை தடுக்கும். பூச்சி தாக்குதலால் செடிகளில் பூக்காமல் மலராது. இந்த நேரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் மோர் கலந்து செடி மீது தெளிக்கவும். வண்டுகள், பூச்சிகள் ஆகியவை மோரின் வாசனையால் செடிகளை அண்டாது.
செடி வளரும் மண் மீது மோர் தெளித்தால் அந்த மண்ணின் வளம் அதிகரிக்கும். மண்ணுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் மோரில் இருந்து கிடைக்கும். இது செடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். செடியின் வேர்களும் வலுப்பெறும்.
ஒரு செடியின் வளர்ச்சியை வைத்தே இலைகளின் நிறத்தை வைத்தே கண்டறியலாம். இலைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை எனில் அதன் நிறம் மங்கிவிடும். இந்த நேரத்தில் செடி மீது மோர் ஊற்றுவது இலை இழந்த பொலிவை பெற்றுத்தரும்.
தக்காளி, மிளகாய் மற்றும் கத்திரிக்காய் செடிகள் ஆகியவை பூக்கும் போது கால்சியம் குறைபாட்டால் நோய் தாக்குதலுக்கு ஆளாகும். இதற்கு பலரும் இரசாயனம் தெளிப்பார்கள். நாம் அதை செய்ய தேவையில்லை. செடி மீது மோர் ஊற்றினாலே கால்சியம் சத்து அதற்கு கிடைக்கும்.
மேலும் படிங்க அமோக விளைச்சலுக்கு பஞ்சகவ்யம் பயன்படுத்துங்க; பயிர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com