யோகா உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உடல் எடையை குறைப்பதற்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் பெரும்பாலான பெண்களுக்கு உள்ள வேலை சுமை காரணமாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகிறது. மேலும் ஒரு சில பெண்களுக்கு உடற்பயிற்சி செய்வதில் விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். இது போன்ற பெண்களுக்கான யோகாசனங்களை இப்பதிகள் பார்க்கப் போகிறோம். நீங்கள் காலையில் எழுந்தவுடன் உங்கள் படிக்கையில் இருந்தபடியே கூட இந்த யோகாசனங்களை செய்ய முடியும்.
பொதுவாக காலை நேர வேலைகள் பரபரப்பாக நடக்கும், இந்நிலையில் உங்கள் மனதை அமைதிப்படுத்தி பொறுமையுடன் செயல்பட யோகா செய்வதை உங்கள் காலை வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். எடை இழப்புக்கு உதவக்கூடிய ஆசனங்கள் பற்றி உலக யோகா அமைப்பின் நிறுவனர், யோகா மற்றும் ஆன்மீகத் தலைவர் ஹிமாலயன் சித்தா அக்ஷர் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: மாம்பழம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
யோகாசனங்களை செய்வதற்கு முன் சில நுணுக்கமான பயிற்சிகளை செய்ய நிபுணர் அறிவுறுத்துகிறார். உங்களுடைய கழுத்து, கை மணிக்கட்டுகள், கணுக்கால் ஆகியவற்றை லேசாக சுழற்றி பயிற்சி செய்யவும். அடுத்ததாக உங்கள் முதுகுத்தண்டை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து சுவாச பயிற்சிகளை செய்யலாம். யோகா செய்வதற்கு முன் இது போன்ற பயிற்சிகளை செய்து உங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்.
யோகாசனங்கள் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன, மன அழுத்தத்தை குறைக்கின்றன மற்றும் நாள் முழுவதும் உங்களை முழு ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகின்றன. பின்வரும் யோகாசனங்களை செய்வதற்கு தினமும் 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும், உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.
முன்னோக்கி வளையும் இந்த யோகாசனவை 'Forward Bend Pose' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இதை செய்யும்போது வயிற்று தசைகள் மற்றும் முதுகு தண்டு பகுதியில் நீட்சியை உணர முடியும். இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் உங்கள் அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்திடலாம். மேலும் உங்கள் செரிமான செயல்முறையும், முதுகெலும்பின் நெகிழ்வுத் தன்மையும் மேம்படும்.
சமஸ்கிருதத்தில் பாலாசனம் என்றால் குழந்தை போல் உட்காருதல் என்று பொருள். இந்த யோகாவை செய்வது மிகவும் சுலபம். இது உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்று தசைகள் வலுவடைவதோடு மட்டுமின்றி, வயற்று பகுதியில் உள்ள கொழுப்பு மற்றும் அதன் சுற்றளவும் குறையும்.
இந்த பதிவும் உதவலாம்: கழுத்தை சுற்றியுள்ள கருமை ஒரு தீவிர நோயின் அறிகுறியா !
சாப்பிட்ட பிறகும் செய்யக்கூடியது இந்த வஜ்ராசனம். இந்த ஆசனத்தை தினமும் பயிற்சி செய்து வந்தால் செரிமானம் மேம்படும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். அல்சர் போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளை நீக்கவும் வஜ்ராசனம் செய்யலாம். இந்த ஆசனம் உடலில் உள்ள இடுப்பு தசைகளை பலப்படுத்துகிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com