herzindagi
vertigo head spinning

Yoga for Vertigo in Tamil: வெர்டிகோ தலை சுற்றலுக்கான எளிய யோகாசனங்கள்

அடிக்கடி தலை சுற்றல் பிரச்சனையா? இதை சமாளிக்க உதவும் எளிய யோகாசனங்களை இப்பதிவில் பார்க்கலாம். <div>&nbsp;</div>
Updated:- 2023-01-20, 08:00 IST

நீங்கள் வெர்டிகோ பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இதனால் அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுகிறதா? வெர்டிகோ பிரச்சனையால் நீங்கள் சமநிலை அற்று உணரலாம். இந்நிலையில் உங்களுக்கு தலை சுற்றல் ஏற்படும் போது நீங்கள் சுழல்வது போல் அல்லது சுற்றி உள்ள பொருள்கள் யாவும் உங்களை சுற்றி சுழல்வது போல் உணருவீர்கள்.

உங்களுக்கு இது போன்ற சிரமங்கள் இருந்தால், கவலை பட வேண்டாம். ஏனெனில், ஒரு சில யோகாசனங்கள் உங்கள் மனதை சமநிலைப்படுத்தி, ஒர்நிலைப்படுத்துவதன் மூலம் வெர்டிகோவின் விளைவுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, உடல் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் வழங்குவதையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வெர்டிகோவை குறைக்க உதவும் சில யோகாசனங்களை பற்றி விளக்குகிறது இந்த பதிவு. இந்த தகவலை பிரபல உடற்பயிற்சி நிபுணர் அன்சுகா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவற்றை பார்ப்பதற்கு முன் வெர்டிகோவின் அறிகுறிகளை முதலில் தெரிந்துகொள்வோம்.

வெர்டிகோவின் அறிகுறிகள்

பெரும்பாலும் தலையின் நிலைப்பாடில் ஏற்படும் மாற்றத்தால் வெர்டிகோ ஏற்படுகிறது. வெர்டிகோவின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு

  • தலை சுற்றல்
  • சாய் நிலை
  • அதிர்வு
  • சமநிலையின்மை
  • ஒரு திசையில் இழுக்கப்படுவது போன்று உணர்தல்

வெர்டிகோவுடன் வரக்கூடிய பிற அறிகுறிகள்

  • குமட்டல் உணர்வு
  • வாந்தி
  • தலைவலி
  • வியர்வை
  • காதுகளில் ஒலித்தல் அல்லது கேட்கும் திறன் இழப்பு

வெர்டிகோவிற்கான யோகாசனங்கள்

பச்சிமோத்தனாசனம்

vertigo

பச்சிமோத்தனாசனம் என்ற வார்த்தை சமஸ்கிருதத்தின் மூல வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. இதில் 'பச்சிம்' என்றால் மேற்கு திசை என்றும், ஆசனம் என்றால் உட்காரும் தோரணை என்றும் பொருள். உடலின் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்த தோரணையில் அமர்ந்து உடலின் நடுப்பகுதியில் ஒரு தீவிரமான நீட்சியை உருவாக்குவதே பச்சிமோத்தனாசனத்தின் பொருளாகும்.

மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெற இந்த ஆசனம் பெரிதும் உதவுகிறது. இது உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் கோபம், பதட்டம் மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது தலை மற்றும் மைய பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதனால் வெர்டிகோ பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ஆசனம் உங்கள் நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.

உஸ்த்ராசனம்

vertigo

உஸ்த்ராசனத்தில், உடலின் வடிவம் ஒட்டகத்தைப் போல ஆகிறது, எனவே இது உஸ்த்ராசனம் அல்லது ஆங்கிலத்தில் 'Camel pose' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் உடல் மற்றும் மன பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மறுபுறம் உஸ்த்ராசனம் அனைத்து வகையான முதுகுவலி, வயிறு, மார்பு, தோள்கள், தொடையின் முன்பகுதி மற்றும் இடுப்பு தசை வலிகளையும் குறைக்க உதவுகிறது.

ஹலாசனம்

vertigo halasana

ஹலாசனம் என்ற வார்த்தையில், ஹல் என்றால் ஏர் என்றும் ஆசனம் என்றால் உட்காரும் தோரணை என்றும் பொருள். இந்த யோகா செய்வதால், உடலின் தோரணை ஏர் போல் மாறும். இது ஆங்கிலத்தில் 'Plough pose' என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆசனம் கழுத்தை வலுவாக்கும். இதை பயிற்சி செய்வது சமநிலை அமைப்பு, உள் காது மற்றும் நரம்பு மண்டலத்தில் செயல்படுகிறது. நரம்பு மண்டலத்தில் மன அழுத்தத்தை நீக்கி மனதை அமைதிப்படுத்துகிறது. இது வெர்டிகோவின் பக்க விளைவுகளை எளிதில் சமாளிக்க உதவுகிறது.

விபரீத கரணி

விபரீத கரணி யோகா என்பது முதுகெலும்பு, கால்கள் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நிவாரணம் அளிக்கும் ஒரு தலைகீழான தோரணை ஆகும். இந்த ஆசனம் படிப்படியாக உடலை தளர்வு நிலைக்கு கொண்டு வருகிறது. இது மூளையை அமைதிப்படுத்துகிறது.

முக்கியமாக தலைச்சுற்றல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் வெர்டிகோவுடன் தொடர்புடைய தலைவலியை நீக்குகிறது, ஏனெனில் இந்த ஆசனம் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு பங்களிக்கிறது, இது அதிக தளர்வுக்கு வழிவகுக்கிறது மற்றும் வலி உணரிகளை மூடுகிறது. கண்களை மூடி இந்த தோரணையில் இருப்பது தலை சுற்றலை குணப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கலை போக்கும் யோகாசனங்கள்

பலாசனம்

vertigo

இது ஒரே தோரணையில் செய்யப்படும் ஒரு யோகாசனம் ஆகும். இது ஒரு நிதானமான தியான தோரணை என்பதால் திரும்ப செய்ய தேவையில்லை. இந்த யோகா தொடைகள், இடுப்பு மற்றும் கணுக்காலில் நீட்சியை உருவாக்குகிறது.

இது மனதை அமைதிப்படுத்தி நரம்பு மண்டலத்தின் அழுத்தத்தைக் குறைக்கும். வெர்டிகோ தாக்குதலின் தொடக்கத்தில், இது போன்ற ஒரு மறுசீரமைப்பு தோரணையை செய்வது உங்களை சமநிலை படுத்த உதவும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்வது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் பத்மாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

எனவே, உங்களுக்கு வெர்டிகோ பிரச்சனை இருந்தால் இந்த யோகாசனங்களை செய்து பயன் பெறவும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com