40 வயது பெண்கள் தொப்பையை குறைக்க கஷ்டமா இருக்கா? இதை பண்ணுங்க ஈஸியா எடை குறைக்கலாம்

ஃபிசிகோ டயட் அண்ட் ஏஸ்தெடிக் கிளினிக்கின் நிறுவனர், டயட்டிஷியன் விதி சாவ்லா 40க்கு பிறகு எடை குறைக்க கஷ்டப்படும் பெண்களுக்காக சில டிப்ஸ் கூறியுள்ளார். மெதுவான வளர்சிதை மாற்றம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக சிரமமாக இருக்கும்.
image
image

பொதுவாகவே பெண்களுக்கு 40 வயது ஆன பிறகு உடல் மாற்றங்கள் தொடங்குகின்றன. இவர்களுக்கு வளர்சிதை மாற்றம் மெதுவாகி, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, எடை குறைப்பது சவாலாக இருக்கும். ஆனால் சரியான முறைகளை பின்பற்றினால், இந்த வயதிலும் ஆரோக்கியமாக எடை குறைக்க முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஃபிசிகோ டயட் அண்ட் ஏஸ்தெடிக் கிளினிக்கின் நிறுவனர், டயட்டிஷியன் விதி சாவ்லா 40க்கு பிறகு எடை குறைக்க கஷ்டப்படும் பெண்களுக்காக சில டிப்ஸ் கூறியுள்ளார். மெதுவான வளர்சிதை மாற்றம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக சிரமமாக இருக்கும். ஆனால் சரியான முறைகளால் இலக்கை அடையலாம் என்கிறார் டாக்டர் விதி சாவ்லா.

40க்கு பிறகு பெண்களுக்கு எடை குறைக்க உதவும் டிப்ஸ்:

ami1

ஊட்டச்சத்து நிறைந்த உணவு:


பதப்படுத்தப்படாத முழு உணவுகள், நார்ச்சத்து, மெலிந்த புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் விதைகளை உணவில் சேர்க்கவும். சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும் என்கிறார் டாக்டர் விதி சாவ்லா.


புரோட்டீன் அதிகம் கொண்ட உணவுகள்:


புரோட்டீன் தசைகளை பராமரிக்கவும், நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கவும் உதவுகிறது. மீன், கோழி, முட்டை, பருப்பு வகைகள் மற்றும் டோஃபூ போன்ற மெலிந்த புரோட்டீன் உணவுகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும் என்று டாக்டர் விதி சாவ்லா கூறுகிறார்.

28e8e464-f55e-4b32-9bab-dc990d8cc927-thumb

தண்ணீர் அதிகம் குடிக்கவும்:


தினமும் 8 - 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது. ஹெர்பல் டீ அல்லது பழங்கள் ஜூஸ் நல்லது என்கிறார் டாக்டர் விதி சாவ்லா.


வலுப்பயிற்சி செய்யுங்கள்:


40க்கு பிறகு தசை வலு குறையும். வெயிட் லிஃப்டிங், ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகள் போன்றவை தசைகளை வலுப்படுத்தி கொழுப்பை கரைக்க உதவும் என்று விளக்குகிறார்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்:


நீடித்த மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோனை அதிகரிக்கிறது. இது வயிற்று பகுதியில் கொழுப்பை சேர்க்கும். யோகா, தியானம் மற்றும் ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைக்கும் என்று கூறுகிறார் டாக்டர் விதி சாவ்லா.


போதுமான தூக்கம்:


தூக்கமின்மை பெண்களுக்கு பசியை அதிகரிக்கும். இரவில் குறைந்தது 7 முதல் 9 மணி நேரம் தூங்குங்கள் என்கிறார் டாக்டர் விதி சாவ்லா.

sleeping

உணவின் அளவை கண்காணிக்கவும்:


வயதாகும் போது சிறிய அளவு உணவை பல முறை பிரித்து இடைவெளிக்கு பிறகு சாப்பிடுங்கள். ஒரு சிறிய தட்டில் உணவை பரிமாறி சாப்பிடுங்கள் என்று ஆலோசனை கூறுகிறார்.

தினமும் உடற்பயிற்சி:


நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் குறைந்தது 30 நிமிடங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் டாக்டர் விதி சாவ்லா.

மேலும் படிக்க: 3 மாதத்தில் 9 கிலோ எடையை குறைத்து அசத்திய ஜோதிகா

ஹார்மோன் ஆரோக்கியத்தை கவனியுங்கள்:


ஹார்மோன் சமநிலை குலைந்தால் உடல் எடை குறையாது. களைப்பு, மன ஏற்ற இறக்கம், திடீர் எடை அதிகரிப்பு இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

அந்த வரிசையில் 40 வயதுக்கு பிறகு பெண்களுக்கு எடை குறைப்பது சவாலாக இருந்தாலும், இந்த எளிய குறிப்புகளை பின்பற்றினால் எடையை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொண்டு, உங்கள் உடல் எடை இலக்கை அடையுங்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP