
உடல்எடை அதிகரித்துவிட்டது, தொப்பையும் போட்டுவிட்டதால் முதிர்ச்சியாகத் தோன்றுகிறோம் என கவலைப்படுகிறீர்களா ? இதற்கு எளிய தீர்வுகள் உள்ளன. ஒரு டேப் எடுத்து தொப்புளில் வைத்து இடுப்பை சுற்றி ஒரு ரவுண்டு அடித்து உங்கள் சுற்றளவை சரிபார்க்கவும். நீங்கள் இதைச் செய்யும்போது எழுந்து நின்று நிலையாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்க உதவும்.

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் இடுப்பளவு 35 அங்குலத்திற்கு குறைவாகவும், ஆணாக இருந்தால் 40 அங்குலத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும். ஆப்பிள் வடிவில் உங்கள் இடுப்பு இருப்பதை விட பேரிக்காய் வடிவம், பரந்த இடுப்புடன் இருப்பது சற்று பாதுகாப்பானதே.
தொப்பை கொழுப்பைக் குறைக்க அல்லது கட்டுப்பட்டுத்த நான்கு எளிய வழிகள் உள்ளன. அவை உடற்பயிற்சி, உணவு, தூக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகும்.

தீவிரமான உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உள்ளுறுப்பு கொழுப்பு உட்பட அனைத்து கொழுப்புகளும் குறைகின்றன. வாரத்தில் ஐந்து நாட்களுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யும் போது இதயத் துடிப்பு வழக்கத்தைவிட அதிகரித்து, வியர்வை சிந்தி, நீங்கள் கடினமாக சுவாசிப்பது போல் உணர வேண்டும்.
மேலும் படிங்க Walking Exercise : ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடும் நடைபயிற்சி
இதன் முடிவுகளை தெரிந்துகொண்டு நடைபயிற்சிக்கு அடுத்தபடியாக ஜாகிங் செல்ல தொடங்குங்கள். ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் என வாரத்தில் நான்கு நாட்களுக்கு இப்படி செய்ய வேண்டும். உங்களுக்கு ஜாகிங் செய்யத் தெரியாது அல்லது அதை மிகவும் சிரமமாக இருந்தால் டிரெட்மில்லில் ஒரு சாய்வு அளவில் விறுவிறுப்பாக நடக்க வேண்டும். ரோயிங் போன்ற இயந்திரங்கள் தீவிரமான உடற்பயிற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைப்பதிலேயே உங்களின் முழு கவனமும் இருக்க வேண்டும். உள்ளுறுப்பு கொழுப்பை எரிக்க நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தொடர்ந்து அதிகரித்திட வேண்டும். ஜிம்மிற்கு செல்வதிற்கு பதிலாக ஜூம்பா நடனம், குழந்தைகளுடன் ஓடி ஆடி விளையாடுவது, கால்பந்து விளையாடுவது உள்ளிட்ட செயல்களில் நீங்கள் ஈடுபடலாம். இவை எதையும் இதுவரை நீங்கள் செய்யாத நபர் என்றால் புதிய உடற்பயிற்சி திட்டத்தை தொடங்குவதற்கு முன் உடல்நலப ஆலோசகரை அணுகுவது நல்லது.

தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கு தனி உணவுகள் எதுவும் கிடையாது. ஆனால் நீங்கள் டயட் பின்பற்றி உடல்எடை இழந்திடும்போது இயல்பாகவே தொப்பை கொழுப்பு குறைகிறது. போதுமான நார்ச்சத்து உட்கொள்வது எடையைக் குறைக்க உதவும். உணவு பழக்கத்தில் மாற்றங்கள் இன்றி தினமும் 10 கிராமிற்கு கரையக்கூடிய நார்ச்சத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் உள்ளுறுப்பு கொழுப்பு குறைய தொடங்கும். இது இரண்டு சிறிய ஆப்பிள், ஒரு கப் பச்சை பட்டாணி அல்லது பிண்டோ பீன்ஸ் சாப்பிடுவது போல் மிகவும் எளிதானது.

நீங்கள் உடல்எடையை குறைக்க வேண்டும் அல்லது கொழுப்பை குறைக்க வேண்டும் என நினைத்தால் முதலில் நல்ல உறக்கம் தேவை. இரவில் ஆறு அல்லது அதற்கும் குறைவான மணிநேரம் தூங்கும் நபர்களுடன் ஒப்பிடுகையில் எட்டு முதல் ஒன்பது மணிநேரம் தூங்கும் நபர்கள் குறைவான உள்ளுறுப்பு கொழுப்பையே பெற்றுள்ளது.
மேலும் படிங்க Ice Bath : குளிர்ந்த நீரில் குளியல் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வாழ்க்கையில் அனைவருக்குமே மன அழுத்தம் இருக்கும். அதை எப்படி கையாளுகிறோம் என்பதே முக்கியமாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது, தீயானம் செய்வது ஆகியவை மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமின்றி உடல்எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com