ரம்யா பாண்டியன் என்றாலே நம் நினைவுக்கு வருவது போட்டோ ஷூட் தான். அவர் சமீபத்தில் பகிர்ந்த யோகா போட்டோ ஷூட்டும் மிகவும் வைரல் ஆனது. அதனை தொடர்ந்து ரம்யா உடற்பயிற்சி செய்யும் புகை படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். விடா முயற்சியுடன், மனம் தளராமல் அவர் செய்யும் ஒவ்வொரு பயிற்சியும் அனைவரின் பாராட்டுக்களையும், லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அவர் தான் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். கை மற்றும் உடலின் மைய பகுதியை ஈடுபடுத்தும் இந்த பகாசனத்தை கிரேன் போஸ் என்று அழைக்கிறார்கள். விடா முயற்சியுடன் தொடர்ந்து பயிற்சி செய்தால் நீங்கள் விரும்பும் இலக்கை எளிதில் அடையலாம் என்றும், அனைவரும் யோகாசனத்தை பயிற்சி செய்ய வேண்டும் எனவும் அவர் பதிவிட்டு இருந்தார். ரம்யா பாண்டியன் பயிற்சி செய்த பகாசனத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: 30 வயதை கடந்தும் ஃபிட் ஆக இருக்க, தமன்னா செய்யும் யோகாசனங்கள்!
பகாசனா
பகாசனா என்பது பாகா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டுள்ளது. இதற்கு கொக்கு என்று பொருள். கிரேன் போஸ் அல்லது பகாசனா என்பது மனதை ரிலாக்ஸ் செய்யும் ஒரு போஸ் ஆகும். இதில் உங்கள் மனதை ஈடுபடுத்தி, உங்கள் முழு உடலின் அழுத்தத்தையும் கைகளின் மீது செலுத்தி கொக்கை போன்ற தோரணையில் உடலை உயர்த்த வேண்டும்.
செய்முறை
- முதலில் பாய் அல்லது யோகா மேட்டில் நேராக நிற்கவும்.
- பின் மூச்சை வெளியேற்றியவாறு குனிந்து உள்ளங்கைகளை தரையில் வைக்கவும். உங்கள் இரு கைகளுக்கும் இடையில் தோள்பட்டை அளவு இடைவெளி இருக்க வேண்டும்.
- கை முட்டியை மடக்கி கொள்ளவும்.
- இப்போது குதிகால்களை உயர்த்தி, கால் முட்டியை கைகளின் மீது வைக்கவும்.
- மெதுவாக கால்களை உயர்த்தி கைகளால் உடலைத் தாங்கி கொக்கு போல நிற்கவும்.
- 15-20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கலாம், பின் இயல்பு நிலைக்கு திரும்பவும்.
நன்மைகள்
- பகாசனா செய்வது கைகள், முக்கிய தசைகள், மணிக்கட்டுகள், முதுகு மற்றும் கால்களை பலப்படுத்துகிறது.
- உங்களை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் உணர வைக்கிறது. இது உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.
- பகாசனா செய்வது முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
- நினைவாற்றலை அதிகரிக்கும்.
- வயிற்று உள் உறுப்புகளின் இயக்கம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும்.
- மனச்சோர்வை போக்கும்
குறிப்பு
உங்களுக்கு தோள், முட்டி, மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் வலி இருந்தால் அல்லது இந்த ஆசனத்தை செய்யும் பொழுது வலி ஏற்பட்டால் தொடர்ந்து பயிற்சி செய்வதை தவிர்க்கவும். மேலும் உங்களுக்கு முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சினை இருந்தாலும் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் நோய்கள் தீர, தினமும் 10 நிமிடங்கள் மட்டும் யோகா செய்தால் போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation