எந்த உபகரணமும் இன்றி உடல்எடையைக் குறைப்பதற்கு எளிதான வழிகளில் ஒன்று நடைபயிற்சி செல்வது. நடைபயிற்சியானது உடல்எடையைக் குறைப்பதோடு மட்டுமின்றி பிற ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது. இதனால் காரணமாகவே மருத்துவர்கள் நம்மை காலை அல்லது மாலையில் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செல்ல அறிவுறுத்துகின்றனர். பிற உடற்பயிற்சிகளை போல நடைபயிற்சி சென்று உடல்எடையைக் குறைக்கும் முடியும் என பலரும் நம்புவதில்லை. இந்த பதவின் மூலம் உண்மையை தெரிந்து கொண்டால் நடைபயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி சென்றால் எவ்வளவு எடையைக் இழக்க முடியும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலில் கலோரிகளை எரிப்பதற்கு நடைபயிற்சி உதவும். நடைபயிற்சி சென்று உடலில் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை பல்வேறு காரணிகளை பொறுத்தது. குறிப்பாக இதில் நம் உடல் எடையும், நடைபயிற்சியின் வேகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 18 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபரால் மணிக்கு 4.8 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்க முடியும். எவ்வளவு வேகமாக நடக்கிறோமோ அந்த அளவிற்கு உடலில் கலோரிகள் எரிக்கப்படும். இதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.
வாரத்திற்கு நீங்கள் குறைந்தது 300 நிமிடங்களில் ஆரம்பித்து தினமும் ஒரு மணி நேரம் என 420 நிமிடங்கள் நடைபயிற்சி செல்ல அறிவுறுத்தப்படுகிறது. பலரும் உடல் எடையைக் குறைக்கும் போது தசையின் வலுவை இழக்கின்றனர். நடைபயிற்சியில் உங்களுக்கு அந்த கவலை ஏற்படாது. நடைபயிற்சியில் தசையின் வலு குறையாது
மேலும் எடை இழப்பு பயணமும் ஆரோக்கியமானதாக அமையும்.
நான் தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செல்கிறேன். எடை குறையவே இல்லை என குற்றச்சாட்டு எழுந்தால் நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தி இருக்கிறீர்கள் என அர்த்தம். ஒரு கிலோ எடை என்பது 7,700 கலோரிகள் ஆகும். நீங்கள் 82-85 கிலோ எடை கொண்ட நபராக இருந்து தினமும் உடற்பயிற்சி சென்று சராசரி தேவையான 2200 கலோரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தால் இரண்டு கிலோ வரை எடை இழந்து இருப்பீர்கள். இதற்கு முதலில் நீங்கள் தினமும் உட்கொள்ளும் கலோரிகளின் அளவை கணக்கிட்டு படிப்படியாக குறையுங்கள். ஆண் ஆக இருந்தால் தினமும் 2,200 கலோரிகளும், பெண் ஆக இருந்தால் தினமும் 2,000 கலோரிகளும் போதுமானது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com