பத்து மாதங்கள் தாயின் வயிற்றுக்குள் வளர்ந்த குழந்தை வெளியே வந்தவுடன் தானாக மூச்சை இழுக்கும். அப்போது முதல் முறையாக மூச்சை உள் இழுப்பதால் குழந்தைக்கு அழுகை வருகிறது. குழந்தை அழுகாத பட்சத்தில் மூச்சு விடவில்லை என புரிந்து கொள்ளும் மருத்துவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இறுதி மூச்சிலும் இதே புரிதல் தான். மூச்சு விடுவதை நிறுத்திவிட்டால் உயிர் பிரிந்துவிட்டதாக அர்த்தம். இதற்கு நாம் மூச்சு விடுவதன் அடிப்படையை புரிந்து கொள்வது அவசியம். நுரையீரல் இயக்கத்தின் மூலம் ஆக்ஸிஜனை உறிஞ்சி கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதே மூச்சு விடுவதன் முதன்மைப் பணியாகும். ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவரது சுவாசிக்கும் முறை முற்றிலும் மாறுகிறது. அப்போது அமைதியான சூழலில் மூச்சுப் பயிற்சி செய்தால் இயல்பு நிலைக்கு வந்துவிடுவோம். எனவே நீண்ட ஆயுளுடன் வாழ மூச்சு பயிற்சி செய்வது அவசியம்.
மூச்சு பயிற்சி செய்வதற்கு முன் சில அடிப்படை விஷயங்க இருக்கின்றன. எடுத்த உடனேயே பிராணயாமம், பஸ்திரிகா என தீவிரமாக செய்ய யோசிக்க வேண்டாம். மூச்சு பயிற்சியை தியானத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்லது.
பத்து நிமிடத்தில் இருந்து 15 நிமிடம் வரை ஒரு இடத்தில் அமைதியாக உட்காரவும். யாருடைய தொல்லையும் இல்லாமல் குறிப்பாக செல்போன் இல்லாத இடத்தில் ஜன்னல் அருகே காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து தியானம் செய்யவும்.
தியானத்தின் போது முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். கூன் போட்டு உட்கார கூடாது. தியானம் செய்யும் போது தோள்பட்டை விரிய வேண்டிய தேவையில்லை. தியானம் மிகவும் இயல்பானது.
மேலும் படிங்க சிறுநீரக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தினமும் அஸ்வ சஞ்சலனாசனா செய்யுங்க!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com