முடியின் ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் மரபணுக்களை பொறுத்தது என்றாலும், நமது உணவுப் பழக்கம் மற்றும் கூந்தல் பராமரிப்பு முறைகள் போன்ற பல விஷயங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடியை பெற உதவும் சில பயனுள்ள குறிப்புகளை இதில் பார்க்கலாம்.
மேலும் படிக்கவும்: Urinary Incontinence: பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சிறுநீர் கசிவை சரிசெய்யும் உடற்பயிற்சிகள்
1. புரதச்சத்தின் முக்கியத்துவம்:
முடியின் ஆரோக்கியத்திற்கு சீரான உணவு முக்கியம் ஆகும். குறிப்பாக, தினமும் குறைந்தது 45 கிராம் புரதச்சத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல புரதச்சத்து உள்ள உணவுகளான இறைச்சி, சிக்கன், மீன், பயிறு வகைகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் முட்டை ஆகியவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
2. சின்க் (Zinc) சத்தின் அவசியம்:
சின்க் (Zinc) குறைபாடு முடி உதிர்வை ஏற்படுத்தும். இதை கட்டுப்படுத்த பிரேசில் நட்ஸ், வால்நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவற்றை உங்கள் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், நிறைய காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் சுத்தமான வடிகட்டப்பட்ட நீர் அருந்துவது அவசியம். தேவைப்பட்டால், மல்டிவைட்டமின் அல்லது சின்க் (Zinc) மாத்திரைகளை மருத்துவரின் அனுமதியுடன் எடுத்துக்கொள்ளலாம்.
3. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்:
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உங்களுடைய முடி வேர்க்கால்களைத் தூண்டும். சால்மன், மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 அதிகம் உள்ளது. ஆளி விதை (flax seed), தயிர், பாலாடைக்கட்டி, சாலட் மற்றும் தானியங்கள் போன்றவற்றிலும் ஒமேகா-3 உள்ளது.
மேலும் படிக்கவும்: கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் கொய்யா இலை டீ; எப்படி தெரியுமா?
4. சரியான ஷாம்புவைத் தேர்ந்தெடுங்கள்:
தவறான ஷாம்புவை பயன்படுத்துவது கூந்தலுக்கு சேதத்தை ஏற்படுத்தும். உங்கள் கூந்தலின் தன்மை மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு ஏற்ற ஷாம்புவை தேர்ந்தெடுக்கவும். அமோனியம் லாரில் சல்பேட் (ammonium lauryl sulfate) அல்லது (sodium lauryl sulfate) சோடியம் லாரில் சல்பேட் போன்ற பொருட்களை கொண்ட ஷாம்பூக்களை தவிர்க்கவும். ஒரு பொருளின் விலை அதன் தரத்தை எப்போதும் குறிப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
5. முடியை பராமரிக்கும் முறை:
ஒரு நாளைக்கு ஒருமுறைக்கு மேல் தலைக்கு குளிக்கக் கூடாது. உங்களுடைய முடிக்கு தேவையான அளவு மட்டுமே ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். அதிக சூடான அல்லது குளிர்ந்த நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஈரமான கூந்தலை மெதுவாக கையாள வேண்டும். அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தவும்.
இது போன்ற விஷயங்கள் அனைத்தையும் சரியாக பின்பற்றினால் உங்களுடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடி உதிர்வு பிரச்சனையை போக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation