இளமையான தோற்றத்துக்கு சிரசாசனம் பயிற்சி; ஒரு வாரத்திலேயே கற்றுக்கலாம்

இளமையான தோற்றம், உடலில் சீரான இரத்த ஓட்டம், நினைவாற்றல், புத்தி கூர்மை ஆகியவற்றுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரே பயிற்சி சிரசாசனம். தலைகீழாக நிற்பதை ஈஸி என சொல்கிறீர்களே என கேட்கலாம். முயற்சித்தால் முடியாதது என்று எதுவும் இல்லை. நீங்கள் மனது வைத்தால் சிரசாசன பயிற்சியை ஒரு வாரத்தில் கற்றுக் செய்யலாம்.
image
image

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாக பார்க்கப் போவது சிரசாசனம். இது ஆசனங்களின் ராஜா என்றழைக்கப்படுகிறது. தலைகீழாக நிற்பதே சிரசாசனம் ஆகும். சிரசாசனம் செய்வதற்கு முறையான பயிற்சி எடுக்க வேண்டும். தலைகீழாக நிற்பது எல்லாம் கடினமான காரியம் என நினைத்தால் ஒரு வாரத்தில் சுவற்றின் உதவியின்றி தாமாக சிரசாசனம் செய்வதற்கு சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டால் போதும். எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாப்பாக சிரசாசனம் செய்வது எப்படி என பார்க்கலாம். சிரசாசனம் செய்வதற்கு வஜ்ராசனம் தெரிந்து கொள்ளவும். பயப்படாமல் நிதானமாகவே சிரசாசனம் செய்யலாம்.

sirsasana benefits

சிரசாசனம் பயிற்சி

  • முதலில் தலையின் எந்த பகுதியை தரையில் இருக்க வேண்டுமென தீர்மானிக்கவும்.
  • இதற்கு ஒரு ஜான் அளவு நெற்றியில் இருந்து கணக்கெடுத்து தலையில் எந்த பகுதியில் மற்றொரு விரல் தொடுகிறதோ அந்த பகுதியை தான் தரையில் வைக்க வேண்டும்.
  • வஜ்ராசனம் நிலையில் உட்கார்ந்து கால்களுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டு குழந்தை தவழ்வது போல் உடல் அமைப்பை மாற்றவும்.
  • கை மூட்டுகளை லாக் செய்து தரையில் வைக்கவும். இப்போது தரையில் தோள்பட்டையும், இரண்டு கைகளின் மூட்டும் ஒரே கோட்டில் இருக்க வேண்டும்.
  • அடுத்ததாக கைகளை முழுமையாக நீட்டி கோர்க்கவும். நிறைய பேர் தவறுதலாக கை மேல் தலையை வைத்துவிடுகிறார்கள். அவ்வாறு செய்யக் கூடாது. உடல் சமநிலையில் இருக்காது.
  • நெற்றியை தரையிலும் தலையின் முன்பகுதியை கைகளில் வைக்கவும்.
  • இப்போது இரண்டு கால்களையும் தரையில் தட்டி பின்புறத்தை உயர்த்தி அர்த்த சிரசாசனம் நிலைக்கு மாறவும்.
  • உங்களுடைய உடல் எடையை மொத்தமாக தலைக்கு செலுத்தி இருப்பீர்கள்.
  • பின்னங்கால் தரையில் படக்கூடாது. அர்த்த சிரசாசனத்தை இரண்டு நாட்களுக்கு சரியாக முயற்சிக்கவும்.
  • கழுத்து பகுதியில் அழுத்தம் கொடுத்து எலும்புகளை முறித்துக் கொள்ளாதீர்கள்.
  • அர்த்த சிரசாசனம் நிலையில் இருந்து ஒரு கால் மட்டும் முற்றிலுமாக உடலோடு ஒட்டி மடக்கி கொண்டு வரவும்.
  • இதன் பிறகு இரண்டு கால்களையும் மடக்கி பார்க்கவும். இப்போது உங்களுக்கு வயிற்று பகுதியில் அழுத்தம் தெரியும்.
  • அடுத்ததாக ஒற்றை கால் மேலே உயர்த்தவும். கீழே விழுவது போல் இருந்தால் பின்நோக்கி விழவும். இப்படி முயற்சித்து இரண்டு கால்களை மேலே கொண்டு வரவும்.
  • கால்களை திருப்பி கிழே இறக்கும் போது வேகமாக அழுத்தம் கொடுத்து இறக்காதீர்கள். ஒரு கால் கீழே கொண்டு வந்த பிறகு அடுத்த கால் கீழ் இறக்கவும்.

மேலும் படிங்கArdha sirsasana Benefits : நினைவாற்றலை அதிகரிக்க அர்த்த சிரசாசனம் செய்யுங்க

சிரசாசனம் நன்மைகள்

  • உடலில் ஹார்மோன் சமநிலைக்கு சிரசாசனம் உதவும்.
  • தோள்பட்டை மற்றும் கைகளில் வலிமை அதிகரிக்கும்.
  • உடலில் இரத்த ஓட்டம் சீராவதால் மன அழுத்தம் குறையும்.
  • நினைவாற்றல் மற்றும் புத்தி கூர்மைக்கு சிரசாசனம் உதவுகிறது.
  • வயிற்று பகுதியில் அழுத்தம் ஏற்படுவதால் செரிமானமும் சீராக இருக்கும்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP